பொது பல சேனாவுக்கு உதவி செய்தோம் : நோர்வே அறிக்கை
தமது நாட்டின் மூலம் பொது பல சேனாவுக்கு உதவி வழங்கப் பட்டதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் கூறுகிறார்.
அவர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்கவுடன் இடம்பெற்ற சந்தின் போது கூறியுள்ளார்.
எவாறாயினும் , பொது பல சேனாவின் இயக்க நடவடிக்கைகளுக்காக தாமது நாடு பன உதவி செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
நாம் எப்போதும் இந்த நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்த உதவுவோம். சிறிது காலத்துக்கு முன்னர் நாம் பொது பல சேனாவின் பிக்குமாருக்கு நோர்வேயிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைத்தோம், அவர்கள் அதனை ஏற்று அங்கு வந்தார்கள். நாம் அவர்களுக்கு அடுத்தவர்களுக்குப் போல பண உதவி செய்யவில்லை, கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி வழங்கியமை மட்டுமே நாம் செய்தோம்.” என நோர்வே தூதுவர் கூறினார்.
இது தொடர்பாக நோர்வே தூதரகம் வெளியிட்ட அறிக்கையை படிக்க இங்கே கிலிக் செய்யுங்கள்
No comments