அஸாத் சாலி இன்று குற்றப் புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகவில்லை
இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பொலிஸ் தலைமையகத்தின் 4ஆம் மாடிக்கு விசாரைணக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அஸாத் சாலி செல்லவில்லை
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலியின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை 4ஆம் மாடிக்கு வந்து, லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் அதிகாரியை சந்திக்குமாறு ஒரு குறிப்பை அஸாத் சாலியின் மனைவியிடம் வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.
எனினும், இந்த அழைப்பை ஏற்று அஸாத் சாலி இன்று பொலிஸ் தலைமையத்தின் 4ஆம் மாடிக்குச் செல்லவில்லை. இதுதொடர்பான மேலதிக விடயங்களை அறியும் பொருட்டு அஸாத் சாலியை தொடர்புகொள்ள முயற்சி பலனளிக்கவில்லை.
(NM)
No comments