அமெரிக்க விஜயம் வெற்றி: பொதுபல சேனா அறிவிப்பு (படங்கள் இணைப்பு)
தங்களது அமெரிக்க விஜயம் வெற்றியளித்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
அங்கு பல்வேறு பௌத்த பிரிவினரை சந்தித்து இலங்கை தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமெரிக்காவில் தங்கி இருந்து ஆறு நாட்களில், 3 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலுள்ள விகாரையில் பொதுபல சேனா தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்களை உடனடியாக வெளியேறுமாறு விகாரை நிர்வாகம் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
(NM)
No comments