Breaking News

சிறியதோர் ஜனநாயக போராட்டம் : ஆடிப்போய் பொலிஸ் பாதுகாப்பு கோரும் BBS

clip_image002

 

தும்மூல சந்தியில் அமைந்திருக்கும் தமது அமைப்பின் தலைமையகத்துக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொது பல சேனா அமைப்பு பொலிஸ் மா அதிபரை வேண்டியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான டிலந்த விதானகே இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமது தலைமையகத்துக்கும் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதனை கருத்திற்கொண்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொது பல சேனாவின் நிறைவேற்றுக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான டிலந்த விதானகேவுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தான் பம்பலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் , பொலிசார் குறித்த இலக்கம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் டிலந்த விதானகே விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த அச்சுறுத்தலானது வெளிநாட்டு இலக்கம் ஒன்றை அடையாளப்படுத்தும் விதமான இலக்கம் ஒன்றிலிருந்தே வந்ததாகவும் அவ்வேளை தான் பொலிஸ் நிலையத்தில் இருந்ததால அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேசிய கீதத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்த பிரானின் வசனங்களை சேர்க்க முனைந்தமையே நேற்றைய சலசலப்புக்கு பிரதான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தனக்கெதிரான கொலை அச்சுறுத்தல்களுக்கும் நேற்றைய ஆரப்பட்டக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் எனவும் அவர் கோடிட்டுக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி : Sonakar.Com

No comments