அல் குர்ஆனை கேவலப்படுத்தினார்கள்: பொது பல சேனா, ராவன பலய 04 பேர் மீது வழக்கு.
அல் குர்ஆனை கேவலப்படுத்தினார்கள் என்ற காரனத்திற்காக பொது பல சேனா மற்றும் ராவன பலய அமைப்புகளின் முக்கியஸ்தர்கல் நால்வர் மீது வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயளாலர் அசாத் சாலி கூறியுள்ளார்.
அல் குர்ஆனின் போதனைகளைத் திரிபு படித்தியமை, திரிபு படுத்திய கருத்துக்களை பகிரங்கமாக கூறியமை, முஸ்லிம் களுக்கு எதிராக சிங்கள மக்களிடம் துவேசத்தை தூண்டியமை போன்ற 06 குற்றச்சாட்டுக்களுக்காக பொது பல சேனா மற்றும் ராவன பலய அமைப்புகளின் தேசிய அமைப்பாளர், செயளாலர் உட்பட நால்வர் மீது எதிர்வரும் வாரம் சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தயாராக இருப்பதாக திரு அசாத் சாலி அவர்கள் கூறியுள்ளர்.
No comments