ரத்தனயிஸமும் அரபுமொழி எதிர்ப்பும், விட்டுக்கொடுப்புகள் எச்சரிக்கை..
கடந்த வாரத்தின் உன்னாவிரத நாடகம் எதிர்பாராத விதமாக நிறைவுக்குக் கொண்டுவரவேண்டி ஏற்பட்டதால் முற்றுப் பெற்றது. அந்த முயற்சியின் தோல்வியை தாங்க முடியாததால் இப்பொது புதி தலிப்பில் புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அதுரலியே ரத்தன தேரர். இப்போது இலங்கைக்கு அரபு மொழி வேண்டாம் என்ற கோசம் இப்போது ஓங்கி ஒளிக்கிறது.
ததமது அரசியல் இறுப்பை தக்கவைத்துக்கொள்ள ஆலுக்கு ஆல் ஏப்ரல் 21 ஆந் தேதிய தாகுதல் தொடரை சாதகமாக்கிக்கொள்ளும் முயற்சியில் பரபறப்பாக இரங்கியுள்ளனர். ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துள்ள ரத்தன தேரர் தன்னை பேசுபொருளாக்கிக்கொள்ள ரொம்பவே ஆசைப்படுகிரார் என்பது மட்டும் நன்றாக விளங்குகிறது. அதற்கு ஹிரு போன்ற ஊடகங்களும் முட்டி பிடித்துத் திரிகிறது.
கடந்த வாரம் ஹிரு செய்தியறிக்கையின் போது அரபு மொழியின் பரவல் தொடர்பில் விஷேட செய்தித் தொகுப்பொன்றையும் ஒளிபரப்பியது. அதில் குர் ஆன் மத்ரசக்களின் பெயர் பலகைகள், பள்ளிவாசல்களின் பெயர் பலகைகள், அரபு நாடுகளால் அமைத்துக்கொடுக்கப்பட்ட குடியிறுப்புகள், குடிநீர் திட்டங்களில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் என எல்லாவற்றையும் காட்டியது போதாமைக்கு LOLC தனியார் நிறுவனத்தின் அல் பலாஹ் எனப்படும் நிதிச் சேவையின் பெயர் பலகையையும் அதில் படமெடுத்துக் காட்டியது. இது இவர்களின் அறியாமையா அல்லது விதண்டாவாதமா என புரிய வேண்டியுள்ளது.
இவை அனைத்துற்கும் மேலாக நமது கதாநாயகன் ரத்த தேரர் முந்தய நாள் வெளியிட்ட கருத்து மிகவும் நகைப்புக்குறியதாக அமந்திருந்தது. அதாவது, அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விமானங்களையும் இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என அருமையான (நகைச்சுவையைப்) பகிர்ந்திருந்தார். அப்படியானால் அரபு எழுத்துக்களோடு வரும் அரபு நாடுகளின் பனத்தியும் நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்தால் நல்லதே..
இப்போதைக்கு விளையாட்டாக இவை தோன்றினாலும், காலப்போக்கில் சமூக ஊடக மூளையால் மாத்திரம் சிந்திப்போர் இதனை முழு நேரப் பனியாக டெக்க வாய்ப்புகள் இலாமலில்லை. எனவே இந் த விடயத்தில் சமூக என்ற வகையில் நிதானமாகவும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும். இதன் உச்சகட்டமாக இக் கோஷம் குர்ஆனில் வந்து நிற்கும் என்பதனையும் இல்லை என்று சொல்லி விட முடியாது.
நாம் விளங்க வேண்டியது..
பொது இடங்களில் அரசகரும மொழிகளான சிங்களம், தமில் மற்றும் சர்வதேச மொழியானா ஆங்கிலம் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் கட்டுப்படாக இருக்கின்றது. இதற்கு அப்பால் வேற் தனிப்பட்ட விடயங்கலில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படியானால் அது அடிப்படை உரிமை மீரலாக அமைந்து விடுகிறது. சீனாவின் நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கலில் சீன மொழி பயன்படுத்த முடுடியுமாயின் அரபு நாட்டிலிருந்து நிதியுதவி பெறப்படும் திட்டங்களில் அரபு மொழி பய்னபடுத்தப்படுவதில் என்ன பிழை இருக்கிறது.
அரபு என்பது எமது தாய்மொழியல்ல, அனால் அது எமது குர்ஆன் அருளப்பட்ட மூல மொழி. உலக முஸ்லீம்களுக்கு அரபு மொழி தவிர்க்க முடியாத் ஒன்று. இதில் நாம் விட்டுக்கொடுப்புகளை செய்வது அந்த அளவு நல்லதாக தோன்ரவில்லை. இபோதைக்கே முகத்திறையில் தொடங்கி ஒவ்வொன்றாக காய்நகர்த்திக்கொண்டு வருகிரார்கள். நாமும் ஒரு நாட்டிலுமிப்படியான சுதந்திரம் இல்ல என பெருமை பாராட்டிக்கொண்டு ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்தால் ஒன்றும் எஞ்சப் போவதில்லை. மத சுதந்திரத்தை உச்சமாய் மதிக்கும் பல நாடுகள் உலகில் உள்ளன என்பதை உலகைப் பற்றி ஓரளவு அறிவுள்ள மக்களுக்கு தெரியும்.
புரிந்து செயாலாற்றுவதோடு, உரியவர்கள் உரிய முன்ண்டுப்புகள் மேற்கொள்வது காலத்தின் தேவை.
No comments