புர்காவும் முஸ்லிம் பெண்களின் தன்மானமும்.
ஏப்ரல் 21 ஆம் தேதிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இனவாதத்திற்கு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த இனவாதிகள் அவர்களின் ஒவ்வொரு நோக்கங்களையும் இந்த தாக்குதலில் பலியானோரின் இரத்தத்தின் மீதேரி சாதிக்க முயற்சிப்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதில் மிக முக்கியமான விடயம் தான் நிகாப் மற்றும் புர்காவுக்கான தடை.
தாக்குதலுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத புர்காவுக்கும் நிகாபுக்கும் நமது ஜனாதிபதி (?) தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்தவர் போல இரவோடிரவாக தடை விதிக்கிறார். இரவில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பல தொலைக்காட்சி செய்திகள் திடீரென இடையே முக்கிய செய்தியாக (Braking News ஆக) இதனை வாசித்து புர்காவையும் ஹிஜாபையும் தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாக மக்களிடையே காட்ட போராடின. சந்தர்ப்பம் பார்த்திருந்த இனவாதிகள் உடணடியாக அடுத்த நாளே “බුර්කාව ගලවා ඇතුලු වන්න” என்ற ஸ்டிக்கர்களை கடைகளுக்கு விநியோக்கிக்கின்றனர். பொது போக்குவரத்து சேவைகளிலும் ஒட்டுகின்றனர்.
இத்துனைக்கும் நடைபெற்ற எந்த தாக்குதலிலும் புர்காவோ நிகாபோ பயன்படுத்தப்படவில்லை. அப்படி தடைசெய்வதாயின் முதலில் தடை செய்திருக்க வேண்டியது கெப், டீ ஷேட் மற்றும் பேக் களயே. நமது ஜனாதிபதி (?) யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இதனை செய்தார் என்பது ஒரு கேள்விக்குறியே.
புர்கா மற்றும் நிகாப் தடையின் வரையரை...
முதலில் எமது சகோதரிகள் (மட்டுமன்றி அவர்கலின் பொறுப்பாளர்களான ஆண்களும்) ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், ஏதோ ஒரு வகையில் புர்கா தடை வர்த்தமானி மூலம் அவசரகால சட்டத்தின் ஓர் அங்கமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் என்ற வகையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது கடமை. எனவே அதிகப்பிரசங்கித் தனமாக செயற்பட்டு வீனான பிரச்சினைகளை விலைக்கு வாங்கவேடிய அவசியம் இல்லை. புர்காவையோ நிகாபையோ தவிர்ப்பது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் கொஞ்சம் காலத்திற்கு பயணங்களை பொது இடங்களுக்கான பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.
அடுத்த விடயம், தடை விதிக்கப்பட்டுள்ளது நிகாபுக்குக் புர்காவுக்கும் பாத்திரமே் மாறாக ஜில்பாப், அல்பாப், ஹிஜாப் மற்றும் ஹபாயாக்களுக்கோ அல்ல. அதாவது முகத்தை மறைப்பதை தான் வர்த்தமானியினூடாக தற்காலிகமாக தடை செய்துள்ளார்கள், அங்கும் எவ்விடத்திலும் நிகாப் என்றோ புர்கா என்றோ கூட கூறப்படவும் இல்லை. முஸ்லிம் பெண்கள் அனியும் ஆடைகளில் முகம் மறைக்கப்படுவது நிகாப் மற்றும் புர்காவினால் என்பதாலே இவ்விரண்டும் இப் பட்டியலில் சேர்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவும். இன்னும் சொல்லப் போனால் முழுமையாக முகத்தை மறைக்கும் ஹெல்மட் களும் இதன் மூலம் தடை செய்யப்படுகிறது.
புர்கா தடையும் நமது சகோதரிகளும்...
ஏற்கனவே சொன்னது போல இந்த தடைகளின் பின்னர் பல பொது இடங்களில் முஸ்லிம் பென்கள் பல சங்கடங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. அதில் சிலர் தடையை பொறுப்படுத்தாமல் புர்கா மற்றும் நிகாபோடு சென்றதன் காரணமாக இந்த சங்கடங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அது அவர்களின் அறியாமை அல்லது மடமை என்றே சொல்ல வேண்டும்.
என்றாலும் சாதாரன ஹிஜாபோடு சென்ற பல சகோதரிகள் பல இடங்களில் அவற்றையும் நீக்கிவிட்டு வருமாறு சோல்லப்பட்டுள்லனர். அதனை விட இன்னும் சில இடங்களில் ஹபாயாக்களையும் கழைந்து விட்டு வருமாறு சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக வைத்திய சாலைகள், சூப்பர் மார்கட்களில் இத்தகைய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் போது பல சகோதரிகள் அந்த கட்டளைகளுக்கு அடிபனிந்து தமது உரிமைகளை விற்று விட்டு வந்துள்ள கவலையான சம்பவங்கள் ஏராலமாக கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் சில சகோதரிகள் அத்தகைய கட்டளைகளுக்கு எதிராக தமது உரிமைக்காக குரல் கொடுத்து தமது உரிமைகளை பாதுகாத்துக்கொண்ட சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்..?
இத்தகைய ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் நீங்கள் ஒரு விடயத்தை முதலில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது அவர்கள் கை வைப்பது உங்கள் தனி மனித உரிமையில் என்பதையும் அது உங்கள் தனித்துவம் என்பதையும் மறக்க வேண்டாம். தனது உரிமையை பாதுகாத்துக்கொள்ள உங்களுக்கு பூரன அதிகாரம் உள்ளது. எனவே அவ்விடத்தில் நீங்கள் எவருக்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. முகத்தை மறைப்பதே தடை செய்யப்பட்டுள்லது, இந்த ஆடை எங்கும் தடை செய்யப்படவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறுங்கள். நீங்கள் இவ்விடயத்தில் தெளிவாக பேசும் போது சில வேலை அவர்கள் அதற்கு மேல் பேசுவதை தவிர்த்து உங்களுக்கு அனுமதி வழங்கலாம், (ஒரு அரச அல்லது தனியார் அலுவகமொனாறாயின்) அடுத்த கட்டமாக அவர்கலின் மேலதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறுங்கள். இத்தகைய சந்தர்ப்பத்தில் உங்களால் உள்ளே செல்ல முடியா விட்டால் உங்கள் கணவரோ அல்லது தந்தையோ யாரேனும் ஓர் ஆணினூடாக மேலதிகாரியை சந்த்தித்து விடயம் தொடர்பில் விளக்கமலித்து உங்கள் உரிமையை வென்று கொள்ள முடியும். இதுவும் சாத்தியமற்ற நிலையில் இத்தகைய மனித உரிமை மீரல்கள் தொடர்பில் விசேடமா ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 1996 எனும் விஷேட தொலைபேசி என்னினூடாக உங்களுக்கு நடந்த அநீதி தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். அதற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆனைக்குழுவில் பிரத்தியேகமாக முரைப்படு செய்யவும் முடியும்.
இந்ததகைய சந்தர்ப்பத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் உங்களை மட்டுமன்றி முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் விடயம் என்பதை மறக்க வேண்டாம். ஒரு வேளை உங்கள் முயற்சிகள் அந்த சந்தர்ப்பத்தில் பயனளிக்க விட்டலும், ஏனையவர்களின் விடயத்தில் அது பல சாதகங்களை உருவாக வாய்ப்புள்ளது. எனவே எனது உரிமைகளுக்காக எந்த தூரத்திற்கு செல்வேன் என்ற என்னம் இருக்குமாயின் எதிர்காலத்தில் இழக்கவிருக்கும் பல உரிமைகளுகு இது கேடயமாக அமையும்.
அபு ஹாஸிக்
07.05.2019
abuabdullahlkm@gmail.com
07.05.2019
abuabdullahlkm@gmail.com
No comments