Breaking News

கருத்தடை மாத்திரைகள் சட்டவிரோதமாக இறக்குமதி - சந்தேக நபருக்கு வலைவீச்சு!

stock-footage-pills-and-tablets-closeup-of-medicine-and-drugsசட்டவிரோதமான முறையில் பாகிஸ்தானிலிருந்து கருத்தடை மாத்திரைகள் கொண்டுவரப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தகர் ஒருவரைக் கைது செய்வதற்காக சுங்கத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மருந்துகளை சுங்கப் பிரிவினர் அண்மையில் கைப்பற்றினர். இதன்போது கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த வர்த்தகர் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதனையடுத்தே குறித்த வர்த்தகரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத கருத்தடை மருந்து கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரையிலும் அந்த வர்த்தகர் கைது செய்யப்படவில்லை.

(ST)

No comments