Breaking News

புத்தர் எதிர்க்காத மாடறுப்பை பிக்குகள் எதிர்ப்பது ஏன்?

photo_148முழு நாட்டு மக்­க­ளையும் அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­திய சம்­ப­வம்தான் பௌத்த பிக்கு ஒருவர் தீக்­கு­ளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்­ட­மை­யாகும்.

இலங்­கையில் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வதை தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்­கையை முன் னிறுத்­தியே குறித்த பிக்கு தீக்­கு­ளித்­தமை வெளிப் படை­யா­னது.

அவ­ரது இந்தச் செயலை ஒரு சாரார் ஆத­ரித்துப் பேசு­கின்ற அதே நேரம் அவர் இவ்­வாறு செய்து கொண்­ட­மை­யா­னது முழு பௌத்த மக்­க­ளை­யுமே அவ­ம­திப்­ப­தாக அமைந்­துள்­ளது எனும் விமர்சனங் களையும் தோற்றுவித்துள்ளது.

எது எப்படியிருப்பினும் பௌத்த மதம் மாடறுப் பதை தடை செய்துள்ளதா? ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்படுவதன் விஞ்ஞான ரீதியான நன்மைகள் என்ன என்பது பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஹலால் எனும் அரபு வார்த்­தைக்கு அனு­ம­திக்­கத்­தக்­கது (Permissible) அல்லது சட்­ட­ரீ­தி­யா­னது (Lawful) என்ற அர்த்­தங்கள் கொடுக்­கப்­பட்­டாலும் அது வெறு­மனே உணவு மற்றும் பானம் என்­ப­ன­வற்­றுடன் மாத்திரம் சுருங்கிவிடாது. மாறாக வாழ்வின் அத்­தனை நட­வ­டிக்­கை­களும் அணு அணு­வாக அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் சட்ட ரீதி­யா­ன­தா­கவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் போதிக்­கின்­றது.

ஹலால் எனக்­க­ருதும் போது அநே­க­மான மக்கள் மாமிச உணவை மட்­டுமே கரு­து­கின்­றனர். ஆனால் ஹலால் என்­பது உணவு, உணவின் வகை, அது பெறப்­பட்ட வழி என்­ப­ன­வற்­றி­லி­ருந்து நாம் உடுக் கும் ஆடை, நாம் மணந்து கொள்ளும் மனைவி என அனைத்து விட­யங்­க­ளையும் உள்­ள­டக்கும்.

ஹராம் (தடுக்­கப்­பட்­டவை) அல்­லாத ஏனைய விட­யங்கள் ஹலால் என்ற வட்­டத்­திற்குள் அடங்கும். ஒரு உணவு அல்­லது ஒரு நடத்தை அல்­லது ஒரு உடை எது­வா­க­விருப்­பினும் அது தடுக்­கப்­பட்டு இருக்­கு­மே­யானால் அப்­பொ­ருளின் பாத­க­மான விளை­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அது தடுக்­கப்­பட்­டி­ருக்கும்.

ஒரு தூய சுகா­தா­ர­மான உடலே ஆரோக்­கி­ய­மான தூய்­மை­யான உள்­ளத்­தையும் ஆன்­மா­வையும் கொண்டிருக்க முடியும். இந்த அடிப்­ப­டை­யான தத்­து­வத்­தையே முஹம்மத் நபி (ஸல்) அவர்­க­ளும் புத்த பெரு­மா­னும் எடுத்துக் கூறி­யுள்­ளார்கள். இந்தக் கண்­ணோட்­டத்தில் நாம் ஹலால் என்ற ஒரு விட­யத்தை விஞ்­ஞான ரீதி­யாக ஆராய்ந்து பார்ப்­போ­மானால் ஹலா­லா­னது ஒவ்­வொரு மனித உயி­ரி­னதும் உரி­மை­யாகும்.

பெளத்த மதத்­த­லை­வ­ரான தலாய்­லாமா 'அறி­வியல்' பற்றிக் கூறு­கையில்,

''பிற­ச­ம­யங்கள் போலன்றி பெளத்தம் அறி­வி­யலின் முடி­வு­களை ஏற்றுக் கொள்­ளத்­ த­யங்­கு­வ­தில்லை. பெளத்­தத்தில் மெய்ப்­பொருள் புரி­தலை நோக்­கிய தேடல் சீரிய ஆராய்ச்­சி­யினால் (Critical Investigation) மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. அறி­வி­யலின் முடி­வா­னது பெளத்­தத்தின் கூற்­றுக்­களில் ஏதா­வ­தொன்றை பிழை­யென நிரூ­பிக்­கு­மானால் அறி­வி­யலை ஏற்று அந்த கூற்றை பெளத்­தத்­தி­லி­ருந்து விலக்கி விட வேண்டும். (Talai lama (2005) the Universe in a single atom: convergence of science and sprituality. Newyork: morgon road books page12, [http://ta.wikipedia.org/s/28n]).

இஸ்லாம் ஹராம் என்று தடுத்த விட­யங்கள் மிகக்­கு­றை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. ஏனைய எல்லா விட­யங்­களும் மனி­தர்­க­ளுக்கு பயன்­ப­டு­ப­வை­க­ளாக படைப்­பா­ளனால் வழங்­கப்­பட்­டுள்­ளன. மேலும் இஸ்லாம் உயிர்­களைக் கொல்­வ­தற்கு மூன்று சந்­தர்ப்­பங்­களை மாத்­தி­ரமே வழங்­கி­யுள்­ளது. அவை உண­விற்­கா­கவும், இறை­வனைத் திருப்­திப்­ப­டுத்­தவும், பாது­காப்­பிற்­கா­க­வு­மே­யாகும்.

பாது­காப்­பிற்­காக பாம்பு போன்ற உயிர்­களைக் கொல்­லு­வதை எந்­தப்­ப­குத்­த­றி­வு­ள்ள மனி­தனும் பிழை­யென்று கூற முடி­யாது. மேலும் உண­விற்­காகக் கொல்ல முடி­யு­மான உயிர்­க­ளாக இஸ்லாம் வரை­ய­றுத்திருப்­பவை மிகச் சொற்­ப­மா­ன­வையே.

இறை­வனைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு பிரா­ணியை கொல்­லு­வ­தாக இருந்தால் அவ்­வங்­கி­யா­னது ஏனைய மதங்­களில் அறுத்­துப்­ப­லி­யி­டு­வது போன்று அவ்­வாறே விட்­டு­வி­டப்­ப­டு­வ­தில்லை. இறை­வ­னுக்­காக அறுக்­கப்­படும் பிரா­ணியின் இறைச்­சி­யா­னது ஏழை மக்­க­ளுக்கு, குடு­ம்பத்­த­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும். எனவே, இறை­வனைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அறுப்­பது என்­பது மற்­ற­வர்­க­ளுக்கு வழங்கி உதவி புரிய வேண்­டு­மென்ற புனித நோக்­கத்­திற்­கே­யாகும். மேலும் அவ்­வாறு உண­விற்­காக அறுப்­ப­தா­னாலும் சரி அது இறை­வனின் திருப்­பொ­ருத்­தத்தை நாடி மட்­டுமே செய்­யப்­பட வேண்டும். இவ்­வாறு மனிதன் உண்ணும் உண­விலும் கூட உள்­ளத்தில் தூய்­மையைத் தொடர்­பு­ப­டுத்தி மன­திற்கும் உட­லிற்கும் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வது தான் ஹலால் என்ற இந்த விட­ய­மாகும்.

உண­விற்­கா­கக்­கூட உயிர்­க­ளைக் கொல்­லக்­கூ­டாது என சிலர் கூறு­கின்­றனர். ஆனால் தாவர உண­வு­களை மாத்­திரம் உள்­ளெ­டுத்­துக்­கொண்டு தங்­க­ளது ஊட்­டச்­சத்து நிலை­மையை எல்லா சமூ­கத்­தா­ராலும் (எஸ்­கி­மோக்கள்) எல்லா வய­து­டை­ய­வர்­க­ளாலும் (மரஸ்மஸ், குவாஸியக்கோர் என்பவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்) உலகின் எந்­தக்­கா­லக்­கட்­டத்­திலும் (கடுமையான வரட்சி) பேண முடி­யு­மென எவ­ராலும் கூற முடி­யாது.

உட­லிற்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய அமி­னோ­வ­மி­லங்கள், கொழுப்­ப­மி­லங்கள் அனைத்­தையும் எந்­த­வொரு தாவர உண­வாலும் முழு­மை­யா­கக்­கொ­டுத்து விட முடி­யாது. ஓர் உயிர் இன்­னொரு உயிரால் உண­வாக்­கப்­ப­டு­வது இறைவன் அமைத்த உண­வுச்­சங்­கி­லியின் பிர­கா­ர­மே­யாகும். இந்த உண­வுச்­சங்­கிலி உணவு வலை என்­பன குழப்­பப்­ப­டு­மே­யானால் ஒரு சூழற்­தொ­கு­தியின் ஒரு சீர்த்­தி­ட­நிலை குழப்­பப்­பட்டு அந்த சூழற்­தொ­குதி அழிந்து போகும் அபா­ய­மேற்­படும்.

மனி­தனும் சூழற்­தொ­கு­தியில் இறை­வனால் அமைக்­கப்­பட்­டுள்ள ஒரு அங்­கி­யாகும். அந்த அங்­கியின் ஒட்டு மொத்­த­மான உண­வுண்ணும் இயற்­கை­யான நடத்­தையைக் குழப்­ப­மு­டி­யாது. ஆனால் மனி­தனின் ஆரோக்­கி­யத்­திற்­கேற்­ற­வாறு உணவு நடை­மு­றையை ஒழுங்­க­மைத்துக் கொடுக்க முடியும். அத­னைத்தான் இஸ்லாம் கூறும் ஹலால் சொல்லி நிற்­கின்­றது.

புத்த மதத்தில் உணவு பற்­றிய பார்­வை­யா­னது இலங்­கையில் அதி­க­மா­னோரால் பின்­பற்­றப்­படும் தேர­வா­தத்தின் (Thera Vada) படி, புத்தர் தமது பிக்­கு­கள் பன்றி, கோழி, மாடு ஆகிய விலங்­கு­களை உண்­ப­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்ளார். ஆனால் இந்த விலங்­குகள் பிக்­கு­க­ளுக்கு உணவு வழங்க வேண்­டு­மென்ற நோக்­கத்­திற்­காக கொல்­லப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது. மேலும் யானை, குதிரை, நாய், பாம்பு, சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, கழு­தைப்­புலி என்­ப­வற்றை மனிதன் உண்­பதை புத்தர் தடை விதித்­துள்ளார். புத்தர் தன்னைப் பின்­பற்­று­வோர்­களை மாமிசம் உண்ண வேண்­டா­மென்று தடுக்­கவும் இல்லை.  வஜ்­ர­யா­ணத்தின் (Vajrayana) படி மாமிசம் உண்­ணு­த­லா­னது எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தடுக்­கப்­பட்­ட­தல்ல. (http.//en.wikipedia.org/wiki/buddhist-vegetarianism)

மேற்­கூ­றிய கூற்றின் படி புத்தர் தன்னைப் பின்­பற்­று­வோர்கள் மாமிசம் உண்­ணு­வதை எதிர்க்­க­வில்லை. எனவேதான் மாமி­சத்தைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் உண்­ப­திலும் விஞ்­ஞானம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மிகச்­ச­ரி­யான ஒரு நடை­மு­றையை இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் பின்­பற்ற வேண்டும்.

விஞ்­ஞான ரீதி­யான ஓர் நடை­மு­றையே இஸ்லாம் கூறும் ஹலா­லாகும். ஒரு நல்ல விடயம் யாரி­ட­மி­ருந்­தாலும் அது மாறு­பட்ட இன, மத கொள்கை உடை­ய­வ­ரா­னாலும் சரி அதைப்­பின்­பற்ற வேண்டும். இதுவே எல்லா மதங்­களின் போத­னை­யு­மாகும். இதுதான் புத்­தரின் போத­னை­யு­மாகும். இது இவ்­வா­றி­ருக்க பசு­வ­தைக்­கெ­தி­ராக தீக்குளிப்பது ஏனோ?

உதா­ர­ண­மாக இஸ்­லாத்தில் இரத்­தத்தை உண்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது (ஹராம்). ஏனெனில் இரத்தம் அதி­க­ள­வான இர­சா­யன நச்­சுப்­ப­தார்த்­தங்­களை உயர்­செ­றிவில் கொண்­டுள்­ளது. இதில் யூரிக்­க­மி­லமும் ஒன்­றாகும். 98% ஆன யூரிக்­க­மிலம் மனித உட­லி­லி­ருந்து சிறு நீரி­னூ­டாக வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது. இந்த சம­யத்தில் தான் ஒரு விலங்கை அறுக்கும் முறை பற்றி நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் முறைப்­படி அறுக்கும் போது தொண்டை நாளம் (Jugular vein) காற்­றுக்­குழாய் (wind pipe) என்­பன முற்று முழு­தாக அறு­ப­டு­மாறு முள்­ளந்­தண்டு வரை கூர்­மை­யான கத்­தி­யினால் விரை­வாக அறுக்க வேண்டும்.

இதனால் அங்­கியின் உட­லி­லுள்ள அனைத்து இரத்­தமும் உடல் உள்­ளு­றுப்­புக்கள் எதற்கும் பாதிப்பு ஏற்­ப­டுத்­தப்­ப­டாமல் வெளி­யேற்­றப்­ப­டு­கி­றது. அத்துடன் இரத்­தத்தில் உள்ள கழி­வுகள் அனைத்தும் இறைச்­சி­யுடன் சேராமல் வெளி­யேற்­றப்­ப­டு­கி­றது. அதனால் இறைச்­சியை உண்­போ­ருக்கு எந்­த­வி­த­மான நச்­சுப்­பொ­ருட்­களும் உடலில் சேர வாய்ப்­பேற்­ப­டக்­கூ­டாது. ஆனால் இஸ்லாம் கூறாத வேறு முறை­களில் (அடித்­துக் ­கொல்­லுதல்) அங்­கி­களைக் கொல்லும் போது உடல் உள்­ளு­றுப்­புக்கள் (இதயம், ஈரல், மூளை, தசை) காயத்­திற்­குட்­பட்டு இரத்தக் கசி­வுக்­குள்­ளா­கின்­றன. இவ்­வாறு கசி­வுக்­குள்­ளாகும் இரத்தம் குரு­திக்­கு­ழாய்­களில் தேக்கமடைந்து இறைச்சி எங்கும் தேங்­கு­கின்­றன. இவ்­வாறு பெறப்­பட்ட இறைச்­சி­யா­னது அதி­க­ள­வான யூரிக்­க­மி­லத்தைக் கொண்­டி­ருப்­ப­தோடு உட­லிற்கு நஞ்­சான விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது. மேலும் ஏனைய அறுத்தல் முறை­க­ளுடன் ஒப்­பிடும் போது இஸ்­லா­மிய அறுத்தல் முறை­யா­னது அங்­கி­க­ளுக்கு 0% ஆன (பூச்சிய வீதமான) வலி­யையே ஏற்­ப­டுத்­து­கின்­றது என விஞ்­ஞான ஆய்­வுகள் கூறு­கின்­றன. ஆகவே இஸ்­லா­மிய முறையால் அங்கி அறுக்­கப்­படும் போது அங்கி வதைக்­கப்­ப­டு­வ­தில்லை.

இப் பின்னணியில் இறைச்சி உண்­ணு­வதை ஆத­ரிக்கும் அதி­க­ள­வான பெளத்­தர்கள் இறைச்­சியைப் பெறு­வது தொடர்பில் விஞ்­ஞான ரீதி­யாக பின்­பற்­றப்­படும் இஸ்லாம் கூறும் ஹலால் என்ற நடை­மு­றையை எதிர்ப்­பது ஏன் என்பதுதான் புரியவில்லை.

பன்­றியும் அதி­லி­ருந்து பெறப்­படும் அனைத்து வித­மான பதார்த்­தங்­களும் இஸ்­லாத்தில் மட்­டு­மல்­லாது யூத மதம், இந்­து­ மதம் ஆகி­ய­வற்­றிலும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. உண்­மை­யி­லேயே பன்­றி­யா­னது மிக அசுத்­த­மான பிரா­ணி­யாகக் காணப்­ப­டு­வ­தோடு பல வகைப்­பட்ட ஒட்­டு­ண்ணி­க­ளுக்கும் வைரஸ்­க­ளுக்கும் விருந்து வழங்­கி­யாகச் செயற்­பட்டு பல்­வே­று­பட நோய்­க­ளையும் தோற்­று­விக்­கி­றது. மேலும் பன்­றியின் உயிர் இர­சா­ய­ன­வி­யலை நோக்­கு­வோ­மே­யானால் உடலின் மொத்த யூரிக்­க­மி­லத்தில் 2%ஐ மாத்­தி­ரமே கழி­வாக வெளி­யே­று­வ­துடன் மீதி 98% உம் அதன் உடலின் உட்­பு­றத்தே தேங்­கி­யி­ரு­க்கின்­றது.

பன்­றியின் உடற்­கூற்­றி­யலை (Anatomy) நோக்கும் போது அதற்கு தெளி­வா­ன­தொரு கழுத்துக் கிடை­யாது. ஆகவே இஸ்லாம் அனு­ம­தித்த விஞ்­ஞான ரீதி­யாக எந்­த­வித பாதிப்­பு­மற்ற முறையால் அறுக்க முடி­யா­த­துடன் யூரிக்­க­மி­லத்தை அதி­க­ளவில் கொண்ட பன்­றியின் இரத்­தத்தை முற்­றி­லு­மாக அதன் உட­லி­லி­ருந்து வெளி­யேற்­றவும் முடி­யாது. எனவே தான் பன்­றியை இஸ்லாம் முழு­மை­யாகத் தடை செய்­தது. எனவே பன்­றியை நாம் புசிப்­ப­தி­லி­ருந்து முற்­றி­லு­மாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்­வா­றான பாத­கங்­களை ஏற்­ப­டுத்தும் பன்­றி­யா­னது உணவில் சிறி­த­ள­வி­லேனும் கலப்­ப­தைத் ­த­டுக்கும் புத்தர், பாது­காப்பு முறை­யான ஹலாலை தடை செய்து பெளத்த தர்­மத்­திற்­குட்­ப­டுமா-?

‘‘உங்­களின் மீது அல்­லாஹ்­வாகிய அவன் ஹராம் என்று தடை ஆக்­கி­யி­ருப்­பது எல்லாம் தானாகச் செத்­த­தையும் இரத்­தத்­தையும் பன்­றியின் மாமி­சத்­தையும் அல்லாஹ் அல்­லா­த­வ­ருக்­காக அறுப்­புப்­பி­ரா­ணி­களல் எதற்கு பெயர் கூறப்­பட்டு விடப்­பட்­டதோ அதையும் தான். ஆகவே எவ­ரேனும் பாவம் செய்யும் நோக்­க­மில்­லா­மலும் வரம்பு மீறா­மலும் இருந்து இவற்றைப் புசிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்டுவிட்டால் அவர் மீது குற்­ற­மா­காது. நிச்­ச­ய­மாக அல்லாஹ் மிக்க மன்­னிக்­கி­றவன். மிகக் கிரு­பை­யு­டை­யவன்’’ (அல்­குர்ஆன் 2: 173).

''செத்­த­வை­யாக அல்­லது ஓடும் இரத்­த­மாக அல்­லது பன்­றியின் மாமி­ச­மாக இருந்­தா­லல்­லாது உண்­ணு­ப­வ­ருக்கு அதை உண்­ணத்­தடை செய்­யப்­பட்­ட­தாக எனக்கு வஹீ மூலம் அறி­விக்­கப்­பட்­டவற்றில் நான் காண­வில்லை. காரணம் நிச்­ச­ய­மாக அவை அசுத்­த­மா­ன­வை­யாகும். அல்­லது அதை அல்லாஹ் அல்­லா­த­வர்­க­ளுக்­காக பெயர் கூறப்­பட்ட பாவ­மா­ன­தையும் தவிர வேறு ஏதும் தடுக்­கப்­பட்­ட­தாக எனக்கு அறி­விக்­கப்­பட்­ட­வற்றில் நான் காண­வில்லை. ஆகவே வரம்பை மீறா­த­வ­ரா­கவும் பாவம் செய்­யா­த­வ­ரா­கவும் எவ­ரேனும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்டு புசித்து விட்டால் அப்­போது அது அவர் மீது குற்­ற­மல்ல. காரணம் நிச்­ச­ய­மாக உம்­மு­டைய இரட்­சகன் மிக்க மன்­னிப்­பவன். மிகக்­கி­ரு­பை­யு­டை­யவன் (அல்­குர்ஆன் 6:145).

மேலும் ஏற்­க­னவே இறந்த ஓர் பிரா­ணியை உண­விற்­காகப் பயன்­ப­டுத்த முடி­யாது. ஏனெனில் அது எப்­பொ­ழுது இறந்­தது, என்ன கார­ணத்­தினால் இறந்­தது என்று எமக்கு தெரி­யாது. சில நேரம் இறந்த பிராணி பல மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன் இறந்து இருக்­கலாம். அவ்­வா­றி­ருப்பின் அது பல நுண் கிரு­மி­களின் தொற்­றுக்கு உள்­ளா­கி­யி­ருக்கும். சில­வேளை அவ்­வி­லங்கு மிக மோச­மான நோய்த்­தாக்­கத்­திற்­குட்­பட்டோ நஞ்­ச­ருந்­தியோ இறந்­தி­ருக்­கலாம்.

எனவே ஏற்­க­னவே இறந்த அங்­கியை உண­விற்­காகப் பயன்­ப­டுத்த முடி­யாது. எனவே தான் ஆரோக்­கி­ய­மான உடல் நலக்­கு­றை­பா­டு­க­ளற்ற பிரா­ணியை கட­வு­ளுக்­காக என்ற தூய எண்­ணத்­துடன் உண­விற்­காக மட்டும் கொல்­லு­மாறு ஹலால் எனும் நடை­முறை வேண்டி நிற்­கின்­றது. இவ்­வாறு உட­லையும் உள்­ளத்­தையும் தூய்­மைப்­ப­டுத்தும் ஹலால் எனும் நடை­மு­றையை சில கடும் போக்­கான பெளத்­தர்கள் எதிர்ப்­பது புத்­தரின் போத­னையின் பேரிலா அல்லது தமது சுய இலாபங்களின் பேரிலா?

இவ்­வா­றான இறைவன் கூறும் பரந்­து­பட்ட வரை­ய­றை­க­ளைக்­கொண்ட ஹலால் முறை­யா­னது விஞ்­ஞா­னத்­துடன் ஒத்­துப்­போ­கு­மே­யானால் பெளத்­தர்கள் மட்­டு­மல்ல, இஸ்­லா­மி­யர்கள் மட்­டு­மல்ல, உல­மாக்கள் யாவரும் அதைப்­பின்­பற்ற வேண்டும். ஹலால் முறை­யா­னது பிழை­யா­ன­தென்று விஞ்­ஞா­னத்தால் 100% ஆக ஆராய்ச்­சி­களால் நிறுவ முடி­யு­மாக இருந்தால் ஹலாலைத் தூக்கி எறிய முஸ்­லிம்கள் தயார்.

இறை­வ­னையும் அல்­லாஹ்­வு­டைய தூத­ரையும் தவிர உலக மக்கள் யாவ­ரையும் இணைத்துக் கொண்­டா­யினும் இறை­வனால் அருளப்பட்ட குர்­ஆனின் வச­னங்­களை விஞ்­ஞான ரீதி­யாக ஆய்­வு­ரீ­தி­யாக உங்­களால் பொய்ப்­பித்துக் காட்ட முடி­யுமா? என்று இறைவன் சவால் விடு­கிறான். அல்லாஹ் கூறும் அதே சவாலை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் ஏனை­ய­வர்­க­ளிடம் விடுக்க ஒரு போதும் பின்­வாங்க முடி­யாது.

ஏனெனில் அல்­லாஹ்வின் திரு­வ­ச­னங்­களை நாம் பூர­ண­மாக ஏற்­றுக்­கொண்­டுள்ளோம். எனவே தான் இலங்­கை­யி­லுள்ள அத்­தனை பெளத்த அறி­ஞர்­களும் சேர்ந்­தா­யினும் சரி இஸ்லாம் கூறும் ஹலால் முறையை விஞ்­ஞான ரீதி­யாக அறி­வாற்றல் ரீதி­யாக பொய்ப்­பித்துக் காட்­டத்­த­யாரா? மாறாக ஹலாலை ஒழிக்க வேண்டும், இது புத்த நாடு, புத்­தர்­க­ளுக்கு மாத்­திரம் தான் இங்கு இட­முண்டு. புத்த போத­னைக்­குத்தான் முத­லி­ட­முண்டு. ஏனை­ய­வர்கள் வந்­தேறு குடிகள். அவர்­களின் கொள்­கை­க­ளுக்கும் அவர்­க­ளுக்கும் இங்கு இட­மில்லை என்று வெறு­மனே கூச்­ச­லி­டு­வ­திலும் துண்டுப் பிர­சு­ரங்கள் வெளி­யி­டு­வ­திலும் சுய இலா­பங்­க­ளுக்­காக அப்­பாவி பெளத்த மக்­களை ஏமாற்­று­வ­திலும் எந்­த­வித அறி­வார்த்­த­மான நியா­யமும் இல்லை.

இவ்­வாறு வெறு­மனே தங்­க­ளது மேலா­திக்­கத்தை நிரூ­பிப்­ப­தற்­காக ஒரு அறிவு ரீதி­யான சிந்­த­னையை, விஞ்­ஞான ரீதி­யான கருத்தை எதிர்ப்­பது பெளத்த போத­னை­யல்ல. புத்தர் தியா­னங்கள் மூல­மாக மனதை ஒரு நிலைப்­ப­டுத்­து­மாறும் உடல் ஆரோக்­கி­யத்தைப் பேணு­வதன் மூல­மாக உடல் உள்ளம் இரண்­டையும் கலந்­துறச் செய்து தூய்­மை­யான ஆன்­மாவைப் பெற வேண்டும் எனவும் பொறுமை, சகிப்­புத்­தன்மை, உண்­மையை ஏற்­றுக்­கொள்ளல், அகிம்சை என்­ப­ன­வற்­றையும் கடைப்­பி­டிக்க வேண்­டு­மென போதிக்­கின்றார்.

இப்­ப­டி­யான குணாம்­சங்­களை பெளத்த தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பப் போவதாகக் கூறிக் கொள்ளும் ஓரிரு பெளத்த பிக்­குகள் மட்டும் இன்னும் உணர்ந்து கொள்­ள­ாமை ஏனோ-?

இப்­போது நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் யுகம் அறி­வியல் யுக­மாகும். அறி­வியல் ரீதி­யான மோதல்­களே இனிமேல் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மதங் களுக்­கி­டையில் ஏற்­படும். எனவே முஸ்­லிம்­க­ளா­கிய நாம் எமக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­களை அறி­வியல் ரீதி­யாக எதிர்­கொள்ள வேண்டும். மாறாக வன் முறையின் மூலமோ தீவி­ர­வா­தத்தின் மூலமோ எந்த ஒரு உரி­மை­யையும் வென்­றெ­டுக்க முடி­யாது. அது இலங்­கையில் வாழும் முஸ்லிம் சமூ­கத்­தையும் சரி சிங்­கள சமூ­கத்­தையும் சரி பாரிய வீழ்ச்­சிக்கே இட்டுச் செல்லும்.

30 வரு­டங்கள் நடந்த யுத்­தத்தின் பின்­னரே தமிழ் சமூகம் அதற்­கான படிப்­பி­னை­களைப் பெற்­றுள்­ளது. இலட்­சக்­க­ணக்­கான அப்­பாவி தமி­ழர்­க­ளையும் சிங்­க­ள­வர்­க­ளையும் நாம் அநி­யா­ய­மாக இழந்­துள்ளோம். எனவே எமக்குள் ஏற்­படும் பிரச்­சி­னை­களை ஆயுதங்களாலோ வன்முறைகளாலோ அன்றி அறி­வியல் ரீதி­யாக எதிர்­கொள்வோம். எது சரியோ அதனை சிறு­பான்மை, பெரும்­பான்மை என்ற பாகு­பாடு இன்றி அனை­வ­ரு­மாகப் பின்­பற்­றுவோம். எது பிழையோ அதனை சிறு­பான்மை, பெரும்­பான்மை என்ற பாகு­பாடு இன்றி அனை­வ­ரு­மாக இணைந்து எதிர்ப்போம்.

எமது நாடு மிகவும் அழ­கிய நாடு. வளம் கொண்ட நாடு. எமது நாட்டை வளர்த்­தெ­டுப்­பது எங்­க­ளது கடமை. அதை முஸ்­லிம்கள் நன்­றா­கவே செய்து வந்­துள்­ளார்கள். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக தங்­களை அர்ப்­ப­ணித்­துள்­ளார்கள். இதை யாராலும் மறுக்க முடி­யாது. முஸ்­லிம்­க­ளா­கிய நாங்கள் பல நூற்­றாண்டு வர­லாறு கொண்­ட­வர்கள். இது உங்­க­ளு­டைய தாய் நாடு மட்­டு­மல்ல எங்­க­ளுக்கும் தாய் நாடு. இதில் எங்­க­ளு­டைய உரி­மைகள் காப்­பாற்­றப்­பட வேண்டும். இவற்றை எதிர்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் இளை­ஞர்கள் தம்மை அறி­வியல் ரீதி­யாக வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக வன்­மு­றையை கையில் எடுக்க எத்­த­னிப்­போ­மே­யானால் எம்மை அழிப்­ப­தற்கு குறி வைத்­துக்­காத்­தி­ருக்கும் பெளத்த கடும் போக்­கு­வா­தி­க­ளுக்கு சந்­தர்ப்பம் அமைத்துக் கொடுப்­ப­தாக மாறி­விடும்.

எம்­மீதும் தீவி­ர­வா­திகள் என்ற முத்­தி­ரையை குத்­தி­வி­டு­வார்கள். எனவே தான் நாம் அனை­வரும் அறிவு ரீதி­யான எழுச்­சிக்குள் தள்­ளப்­பட வேண்டும். ஒவ்­வொரு இளை­ஞனும் இனி பிறக்­கப்­போகும் ஒவ்­வொரு குழந்­தையையும் ஒரு ஸாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞனாக உருவாக்க முன்வர வேண்டும் அப்படி ஒரு யுகத்தை உருவாக்குவோமேயானால் ஹலால் அல்ல இஸ்லாம் எனும் தூணிலுள்ள ஒரு செங்கல்லைத்தானும் எவராலும் அசைக்க முடியாது.

-ஸகி அஹமட், மருத்துவபீடம் கிழக்கு பல்கலைகழகம்

நன்றி : விடிவெள்ளி

No comments