ஏனைய மதங்கள் பெளத்தத்தை அழிப்பதை நம்பமுடியாது: உயர்கல்வி பிரதியமைச்சர்
அந்நிய மதங்கள் பெளத்த சமயத்தை அழிக்கப்போவதாக சிலர் கூறிவருவதை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாவுல அபய ஸ்ரீ கங்காராம விகாரையில் நடைபெற்ற சயம நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது;
இன்று பெளத்தர்களின் போக்கு சீரழிந்து வருவதனால் பல்வேறு அச்சுறுத்தல்களை பெளத்த சமயம் எதிர்கொண்டுள்ளது. பெளத்தர்கள் என்ற வகையில் கொள்கை அடிப்படையில் புத்த தர்மத்தின் போதனைகளுக்கேற்ப வாழ்ந்தால், இவ்வாறான பிரச்சினைகள் உருவாகாது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா கூறியதாவது; சிங்கள பெளத்தர்கள் என்ற வகையில் நாம் பலவந்தமாக கொண்டாட்டங்களை நடத்துகின்றோம். போராடுகின்றோம்.
போராட்டங்கள் என்றாகும்போது இனத்தில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதனைக் காணக்கூடும். உலகெங்கிலும் உள்ள சிங்கள இனம் குறைந்துவருகின்றது. நாம் சிறிய குடும்பம் என்றுகூறி இரு பிள்ளைகளையே வளர்த்து வருகிறோம். இதனால் நமது சனத்தொகை அழிந்தே போய்விடும். இதுபற்றி மகாசங்கத்தினர் அடிக்கடி போதித்துவருகின்றனர். நாம் இதுபற்றி திரும்பிப் பார்க்கவேண்டும்.
மற்ற மதத்தவர்களும் பிள்ளைகள் பெறுவதை பேசிப் பேசி இருப்பதில் அர்த்தமில்லை. இன்றாகும்போது, சிங்களவர்களது சனத்தொகை குறைந்துள்ளது. எங்களுக்கு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றலிருந்தும் நாம் பிள்ளைகளை பெற்ற வளர்ப்பதில்லை. இன்று எமது சிங்கள சமூகத்தில் மூன்று, நான்கு பிள்ளைகளைப் பெற்றால் ஏளனமாகப் பார்க்கின்றனர். இந்நிலை மாறவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments