Breaking News

குவைட்டில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை

Gulf1குவைட்டில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்து வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

2006ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Hajjaj Al Sa’adi என்ற எகிப்திய பிரஜைக்கு எதிராக 18 பலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குவைட்டின் சாலிபியா சிறைச்சாலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய Ahmad Abdul Salam என்ற நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments