அசாத் சாலியின் மகள் ஜனாதிபதிக்குக் கடிதம் (கடிதம் இணைப்பு)
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலியின் மகள், அமீனா அசாத் சாலி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், விசேட வேண்டுகொள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமது தந்தையான அசாத் சாலி அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட தருணம் முதல் இதுவரை உணவு, நீர் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் தமது தந்தையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அமீனா அசாத் சாலி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தாமும் தமது தாயாரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தந்தையிடம் உண்ணாவிரதத்தை முடிவுக்குக்கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்த போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளதாக அமீனா அசாத் சாலியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
'நான் சிறுபராயம் முதல் நன்கு அறிந்த விடயம் என்னவெனில், நீங்கள் எமது குடும்பத்தின் மிகவும் நெருங்கிய நண்பர். ஆகையால், எனது பாசமிகு தந்தைக்கு உங்கள் கையால் ஒரு கோப்பை நீரைக் கொடுத்தால் கட்டாயமாக எனது தந்தை வழமை நிலைக்குத் திரும்புவார்.
நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாவதற்காக எனது தந்தை எந்தளவு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளார் என்பதை நீங்களும் இந்நாட்டு மக்களும் நன்கு அறிவீர்கள்.
ஆகையால், உங்கள் கைகளால் ஒரு கோப்பை நீரை வழங்குவதன் மூலம் இந்த நாட்டின் சமாதானத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒருவரும், உங்களது நண்பருமாகிய அவரின் உயிரைப் பாதுகாக்க முடியும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கைகொண்டுள்ளேன்.
எனவே, இது தொடர்பில் கருணை உள்ளம் கொண்டு எனது தந்தைக்காக நான் விடுத்துள்ள வேண்டுகோளை நிறைவேற்றுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,' என்று அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள் மொழியில் எழுதப்பட்ட கடிதம் வருமாறு:
අමිනා අසාත් සාලි, අතිගරු ජනාධිපතිතුමා 61 එ මල් පාර, ජනාධිපති ලේකමි කාර්්යාලය කොළඔ 3 කොළඔ 2013 මැයි 05 අතිගරු ජනාධිපතිතුමණි කාරුණික ඉල්ලීමයි මම අසාත් සාලි මහතාගේ දියනිය අමීනා සාලි, මා මෙම විශේෂ හා හදිසි ඉල්ලීම ඔබතුමාගේ විශේෂ හා කාරුණික අවධානයට යොමු කර ඉල්ලා සිටින්නේ. මාගේ පියා වන අසාත් සාලි මහතාගේ පෞද්ගලීක ජීවිතය හා දේශපාලන ජීවිතය පිළිබදව ඔබතුමා හොදාකාරවම දන්නා කරුනකි. රටෙි ප්රජාතන්ත්රවාදය වෙනුවෙන් හා සාමය වෙනුවෙන් පමණක් සටන් කළ මාගේ ආදරණීය පියා අසාධාරණ ලෙස අත්අඩංගුවට ගැන තිබෙනවා. අත්අඩංගුවට ගනු ලැබු වෙලාවෙ සිට මෙ දක්වා කිසිම ආහාරයක් හෝ පානයක් නොගැන උපවාසයේ පසුවන බැවින් මාගේ ආදරණිය පියාගේ ශරීර සෞඛ්ය තත්වය ඉතා අසතුටුදායක තත්වයට පත් වී ඇති නිසා මා ද මාගේ මව ද පියා හමු වී ආහාර ද ජලය ද පානය කරන ලෙස ඉල්ලා සිටි නමුත් ඔහු තරයෙන්ම ප්රතික්ෂේප කර සිටි. මා කුඩා වයසේ සිට හොදින් දන්නා කාරණයක් ඔබතුමා අපගේ පවුලේ ඉතා සමීප හිත මිත්රයෙකු බව එ බැවින් මා විශ්වාස කරනවා මාගේ ආදරණිය පියාට ඔබතුමාගේ අතින් වතුර වී¥රුවක් ලබා දෙන්නේ නමි අනිවාර්්යයෙන්ම මාගේ පියා යථා තත්වයට පැමිණෙන බව. ඔබතුමා මෙි රටෙි ජනාධිපති වීමට මාගේ පියා කොතරමි කැපවීමක් කලා ද යන්න ඔබතුමාත් මෙි රටෙි ජනතාවත් හොදින් දන්නා කරුණකි. එම නිසා ඔබතුමාගේ අතින් ලබා දෙන වතුර වී¥රුවක් තුලින් මෙි රටෙි සාමයට කැප වී සිටි පුද්ගලයෙකුගේ හා ඔබතුමාගේ මිත්රයාගේ ජීවිතය ආරඏා කළ හැකි යයි මා තරයෙන් විශ්වාස කරමි. එ බැවින් මෙි පිළිබදව සානුකමිපීතව ඔබතුමාගේ කාරුණික අවධානය යොමු කර මාගේ පියා වෙනුවෙන් මාගේ ඉහත ඉල්ලීම ඉටු කර දෙන ලෙස මා ඉතා කාරුණිකව ඉල්ලා සිටිමි. ස්තූතියි මෙයට විශ්වාසී අමිනා සාලි |
No comments