அரசில் இருந்து விளகுவதகச் சொல்லும் முஸ்லிம் கட்சிகள் விளகிச் செல்லுங்கள்…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் உள்ள சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசில் இருந்து விளகிச் செல்வதாகச் சொல்கின்றனர், ஆனால் விளகிச் செல்வதில்லை. ஆகையால நாய் போகும் திசையில் தான் வால் போக வேண்டும், மாறாக வால் போகும் திசையில் நாய்க்குப் போக முடியாது அவர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என ஏற்றுமதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் பைசல் முஸ்த்ஃபா கூறியுள்ளார்.
“இன்று சில அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சிகளும் அரசில் இருந்து விளகுவதாக கூறிக் கூறி இருக்கின்றனர். அதே வேளை அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர். குற்றச்சாட்டுக்களை கூறிக்கொண்டு இருப்பதை விட்டு செல்வதென்றல் விளகிச் செல்லுங்கள். என அவர் கூறினார்.
தமது கட்சியின் கௌரவத்தைப் பாதுகாத்துக்கொண்டு அரசின் மரியாதையையும் பாதுகாத்துக் கொண்டு நாகரீகமான முறையில் அரசியல் செய்ய வேண்டும். அல்லாவிட்டால் அரசை விட்டு செல்ல வேண்டும் என கூறினார். மத்திய கொழும்பு சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் மக்களுடனான ஒரு சந்திப்பிலேயே பிரதி அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
No comments