சாலி சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்…
கொழும்பு மா நகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அசாத் சாலிக்கு கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலையில் அளிக்கப்பட்டுவந்த சிகிச்சைகள் முடிவடைந்துள்ளன.
இதனை நவலோக தனியார் வைத்தியசாலை உறுதி செய்தது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் அவர் மீது விதித்திருந்த தடுப்புக்காவல் உத்தரவு கடந்த வெள்ளியன்று மீளப்பெறப்பட்டதை அடுத்து தேசிய வைத்தியசாலையிலிருந்து நவலோக தனியார் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்த அவர் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்தே மாலை 6.30 க்கு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைகளை முடித்துக்கொண்டாமை குறிப்பிடத்தக்கது.
No comments