Breaking News

உலகிலேயே சிறந்த மனிதர்கள் சிங்களவர்கள் - சொல்கிறர் தன்னை முஸ்லீம் எனக்கூறும் அஸ்வர்

aswer94முஸ்லீம் மக்களின் பொருளாதாரத்துக்கு நெருக்கடிகளை கொடுத்து அவர்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது அதிகரிக்கும் இவ்வேளையில், சிங்களவர்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மிகவும் கருணையானவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெசாக் பௌர்ணமி காலத்தில் வீதியில் செல்லும் மக்களுக்கு பல்வேறு உணவு பானங்களை வழங்கி வருதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் வாழ்க்கை முறைமையில் முக்கியமானதாக தானங்களை (தன்சல்) கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்கி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம் மக்களின் துன்பங்களை பற்றி பேசாமால், தன்னை முஸ்லீமாகக் காட்டிக்கொள்ளும் அஸ்வர் தனது தனது சுயநலத்திற்காக கூறிய கருத்து தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தமிழ் - முஸ்லீம் உறவை பேணுவதில் ஆர்வமுள்ள செயற்பாட்டாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. இவன் தான் சில ஆண்டுகளுக்கு முன் பேருவலை பிரதேசத்தில் காதிரீயா தரீக்காவின் நிகழ்வொன்றில் பேசும் போது "இந்த தரீக்காவில் அமல்கள் இடம்பெறும் அழகைப் போல புனித கஹ்பாவிலும் கான முடியாது" என்று கஹ்பாவையே குறையாய் பேசினான். இனனெல்லாம் இடத்துக்கு ஏற்றாட்போல பேசும் பச்சோந்திகள்.

    ReplyDelete