Breaking News

அஸாத் சாலியுடனான அரசியல் அரசுக்கு தேவைப்படாது

azath-salley3 சிரேஷ்ட ஊடகவியலாளரான திஸ்ஸ நாயகம், இனவாதத்தை தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஒருமைப்பாடு தொடர்பாக, ரணவக போன்ற முனிவர்கள் இருக்கும் அரசாங்கத்தில்தான் மத அமைதிக்கு பங்கம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் அஸாத் சாலி கைது செய்யப்பட்டார். இது, பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசா ர தேரர் போன்றோருடன் சகோதர உறவு வைத்திருக்கும் குழுவின் தேவையை நிறைவேற்றும் நோக்கத்துக்கன்றி வேறில்லை.

மத வேற்றுமையை வளர்ப்பது அரசாங்கத்துக்குப் பிரச்சினையாயின், சிறைக் கைதியாக்க வேண்டியது அஸாத் சாலியை அல்ல, ஞானசார தேரரைத்தான். அஸாத் சாலி பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்து ராஜபக்ஷகளையும் இணைத்து விமர்சித்தமையாலேயே அவர் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் அமைச்சர்கள் மேற்படி பிரச்சினை குறித்து மௌனம் காத்தமை, பொதுபலசேனா, ராஜபக்ஷவின் அடிவருடியாக இருப்பதை தெரிந்து கொண்டதனாலாகும்.

சிறுபான்மையின அமைச்சர் ஒருவர் காவியுடை தரித்த சண்டியருக்கு எதிராக நடந்தால் சிறை அல்லது அதனைவிட அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவர். அஸாத் சாலியின் கைதுக்கு பல்வேறு காரணிகளும் இருக்கலாம். 19 ஆவது அரசியல் அமைப்புத்திருத்தத்தை இலகுவாகவும் அவசரமாகவும் நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகளைப் பயம் கொள்ள வைக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம்.

ஏனெனில் எதிர்த்து நின்றால் சிறுபான்மையினத் தலைவர்களுக்கு ஏற்படும் விபரீத விளைவு குறித்த அபாய அறிவிப்பாகவும் இருக்கலாம். முன்பு உருவகித்த நக்சலைட் சதி முயற்சிகளுக்கு இஸ்லாமிய சா யம் பூசுவதற்கான முதல் நடவடிக்கையாகவும் இருக்கலாம். இதன் மூலம் டில்லி, லண்டன், வொஷிங்டனையும் தம்பால் ஈர்க்கலாம் என்றும் நினைத்திருக்கலாம்.

டில்லியும் லண்டனும் ஹம்பாந்தோட்டையில் நடக்கும் பொதுநலவாய மாநாடு காரணமாக முக்கிய இடம் பெறுகின்றன. அத்துடன் கோத்தாபயவும் பஸிலும் ஐக்கிய அமெரிக்காவில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் என்பதால் வொஷிங்டனின் நல்லிணக்கத்தையும் வைத்திருக்க வேண்டியுது அவசியமாகும்.

அஸாத் சாலியின் கைது அநீதியானதாகும். அதற்கு நிபந்தனையின்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ராஜபக்ஷகளுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்குள் அஸாத் சாலியின் எதிர்கால அரசியல் அவசியப்படாது. அதனால் ராஜபக்ஷவின் அநீதிக்கு அவர் இலக்காகியிருக்கிறார். அதற்கு நாமும் இரையாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்து, ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் விரும்பும் அனைவரும் அஸாத்சாலிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

அஸாத்சாலி கைது செய்யப்பட்டமை குறித்து, நாம் மௌனம் காத்தால், அல்லது அசட்டை காட்டினால் அது சகோதர குழுவை விட பாரதூரமான அழிவுக்கும் அநீதிக்கும் இடமளிப்பதாகவே அமையும். அஸாத் சா லிக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவது இலங்கையில் ஜனநாயக்தை நிலை நாட்ட எடுக்கும் போராட்டத்தில் புறந்தள்ளக்கூடியதொன்றல்ல.

ஹம்பாந்தோட்டையில் நடக்கவிருக்கும் மாநாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது, வட மாகாண சபை த் தேர்தலை செப்டெம்பரில் நடத்தப் போவதான வாக்குறுதியை வழங்கியதன் மூலமேயாகும். ஆனால் அது நிறைவேற்றக்கூடிய ஒரு வாக்குறுதியல்ல. ராஜபக்ஷகள் பாராளுமன்றம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது நீதிமன்றத்தின் மூலமேனும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு விரும்புபவர்களல்லர். தமது குடும்ப நிர்வாகத்துக்கு கீழ்ப்படாத எந்த மாகாண சபையும் அமைவதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பால் பரிபாலிக்கப்படக்கூடிய வட மாகாண சபை அமைவதை இவர்கள் விரும்ப மறுப்பது பிரிவினைக்கு துணைபோகும் என்ற காரணத்தினால் அல்ல. ராஜபக்ஷவின் எதிரிகளது கை ஓங்கும் நிலைக்கு எதிர்கட்சி பலம்பெற வாய்ப்பாக அமையக்கூடாது என்ற காரணத்தினாலாகும்.

இனப் பிரச்சினையொன்று இருப்பதை ராஜபக்ஷகள் நம்ப மறுக்கிறார்கள். தமிழ் இனவாதிகள் வந்து அமைதியின்மையை விதைக்கும் வரையில் தமிழர்கள் மிகவும் திருப்தியுடன் இருப்பார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழப் போர் உருவானது தமிழ் மக்களுக்கு தொடராக துன்பம் விளைவிக்கப்பட்டதால் அல்ல. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தனக்கென்று ஒரு ராச்சியம் இருக்க வேண்டும் என்பதனாலேயாகும்.

நல்லிணக்கப்பாடு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ராஜபக்ஷ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருவது இந்த அடிப்படையிலாகும். தமிழர்களுக்கு சட்ட பூர்வமாக துன்பங்கள் இழைக்கப்படுவது நிறுத்த முடியாத நிலையில் அரசியல் தீர்வொன்றோ அல்லது அதிகார பகிர்வோ அவசியமில்லை. இந்த நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் புலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய வழியாக எந்த சிறு பான்மையின செயற்பாட்டுக்கும் எத்தகையை இழுத் தடிப்பும் இல்லாது நிலைப்பாட்டை செயற்படுத்துவதாகும்.

எந்தவொரு உயிர் பலியையும் கண்டவுடன் அதற்கு கடும் தாக்குதல் கொடுப்பதன் மூலம் சிறுபான்மையினங்கள் தம் நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் வசனங்களை அடக்கிக் கொள்வதற்கும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தமது செயற்பாடுகளை அடிப்படுத்திக் கொண்டு, தாம் இரண்டாம் நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய போன்ற எதிரிகளுடன் கூட வாழ்வதற்கும் கற்றக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜபக்ஷக்கள் செப்டெம்பரில் வடக்கு மாகாண சபை த் தேர்தலை நடத்தினாலும் அது மோசடியும் அநீதியும் நிறைந்த, சுதந்திரமற்ற ஒரு தேர்தலாகவே அமையும். அல்லது மாகாண சபைகளுக்குரிய சகல அதிகாரங்களையும் பிடுங்கிக் கொள்வர். மோசடியான தேர்தல் இடம்பெறுவதாக நாட்டில் மடடுமன்றி, சர்வதேச மட்டத்திலும் கருத்து நிலவும் விதத்தில் சகோதர குழு 19ஆவது திருத்தத்திற்கு மிகவும் ஆதரவு தெரிவிக்கிறது.

அதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத்தை பகிர்வது மெருகுபடுத்தப்பட்ட பிரதேச சபையின் நிலைக்கு தள்ளப்படும். பெரும்பாலான சிறுபான்மையின கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அணியில் அங்கம் வகிக்கின்றன. அக்கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகள் வகிக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் உண்மையிலே கீழ் மட்டத்திலுள்ள ஒருவரது அதிகாரமும் வரையறுக்கப்பட்ட பயன்பாடுகளும்தான் அடைந்து கொள்கிறார்கள்.

சிறுபான்மைக் கட்சிகள் இருப்பது, சிங்கள பௌத்த உத்தமரின் ஆட்சியில் ஒரு கைதியைப் போன்ற நிலையிலாகும். பெரும்பாலான அதிகாரங்கள் சென்றடைந்திருப்பது சகோதரர்களிடையேயும் நம்பிக்கைக்குரிய சிஷ்யர்கள் சிலரிடமுமேயாகும். ஏனைய சிங்கள அமைச்சர்களின் கைகளிலும் கூட அதிகாரங்கள் இல்லை.

ராஜபக்ஷகளுக்கு தேவையாக இருப்பது, சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் இவற்றுக்கு இணங்கி செயல்பட வேண்டும் என்பதாகும். இவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பதை நிராகரிப்போருக்கு எதிராக நடவடிக்கைக்கோ அல்லது மேலும் பாதகமான நிலைக்கோ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். யுத்தத்தை வென்றெடுத்த ஜெனரலுக்கோ அல்லது அஸாத் சாலிக்கோ நேர்ந்த கதிதான் நடக்கும்.

ராஜபக்ஷகளுக்கும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களுக்கும் இருப்பது பரஸ்பர மோதல் நிலையே. சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் ராஜபக்ஷக்களின் அதிகார வெறியை மூடி மறைத்துக் கொள்வதற்கு கவர்ச்சியான விவரணம் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. ராஜபக்ஷ ஒழிப்பு இயந்திரத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுவதன் மூலம் சிங்கள பௌத்த கடும்போக்காளர் 1956இல் இருந்ததை விடவும் அதிகாரமும் அழுத்தமும் கொடுக்கும் சக்தியொன்றை வைத்திருக்கிறார்கள். சகோதரர்கள் தேசாபிமானத்தை பிரதிபலிக்காது குடும்ப ஆட்சியை கொண்டு நடாத்துவதற்கு முயற்சிப்பார்களேயானால் தெற்கிலிருந்து கிளர்ந்தெழும் எதிர்ப்பு அலைக்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது போகும்.

தெற்கில் மேலாதிக்கவாத ஆட்சியை மேற்கொள்ள ராஜபக்ஷ கருத்திட்டத்தை செயற்படுத்துவது, தேசாபிமானத்தை முன்வைத்துக் கொண்டேயாகும். ராஜபக்ஷகளுக்கு சிங்கள பௌத்த கடும்போக்காளர்களை முடிவுக்குக் கொண்டுவர இயலாத அதேநேரம், அவர்களுக்கும் ராஜபக்ஷ அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான போரில் அமோக வெற்றியீட்டிய களிப்பில் காலம் தள்ளிய நிலை மங்கிக் கொண்டிருக்கும் போது தெற்கில் அதிகார பலத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ராஜபக்ஷக்களுக்கு சமூக பொருளாதாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில் சிங்கள தென் பகுதிக்கு சமாதானத்தின் பிரதிபலன்களை அவசரமாகவும் போதியனவாகவும் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதாவது, பொருட்களின் விலை குறைப்பு, வாழ்க்கைத் தரம் உயர்வு, வறுமையை ஒழித்தல், தொழில் வசதி செய்து கொடுத்தல், கல்வி வாய்ப்பு, சுகாதார சேவைகளைக் குறைவின்றி நிறைவேற்றல் போன்றன மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் இவைகளை நிறைவேற்றுவதென்பது முயற்கொம்பாகும்.

ராஜபக்ஷவின் ஆட்சி சோற்றுக்குப் பதிலாக முக்கிய இடம் கொடுப்பது துப்பாக்கிகளுக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குமேயாகும். இந்த முக்கியத்துவம் கொடுக்கும் நிலை அவசியப்படுவது சமாதான காலத்தில் ஊடக அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது குற்றமாகக் கொள்ளப்படுவதாகும், நீதி மன்றத்தை தம் பிடிக்குள் வைத்துக் கொள்வதற்கும் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக யுத்த சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பது இதற்காகவேயாகும்.

சட்டத்திற்கு அப்பால் செயலாற்றுவதற்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கும் தெற்கில் அச்சநிலை ஒன்று இருக்க வேண்டும். இதற்கு பொதுபலசேனாவும் மிகவும் இன்றியமையாததாகும்.
கோத்தாபய ராஜபக்ஷ மட்டுமன்றி வேறு யாரும் பொதுபலசேனா பிக்குமார்களுக்குப் பயப்படத் தேவையில்லை. அத்துடன் அவர்கள் குறித்தும் சந்தேகப்படவும் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாதெனில் சிங்கள பௌத்தர்களை தமிழ் எதிர்ப்புக்கள், முஸ்லிம் குழப்பங்கள், கிறிஸ்தவர்களின் சதிகள் போன்றன குறித்து அவதானத்துடன் இருக்க வைத்திருத்தலாகும்.

அவர்களின் மூளைகள் பீதி நிறைந்ததாகச் செய்தல் அப்போதுதான் அவர்களால் பொருளாதார பிரச்சினைகளை மறக்கச் செய்து ராஜபக்ஷ பார்வையில் பார்த்துக் கொண்டிருக்க முடியுமாகிறது. அஸாத் சாலி எதிர்காலத்தில் குற்றம் செய்தால் அவரது கைது குறித்து ராஜபக்ஷ இயந்திரத்தில் வெளியிடும்போது, அது சரியான செயற்பாடாகவே காட்டப்படும். அவர் அடைக்கப்பட்டது அந்த அடிப்படையிலேயாகும். இக்காரணிகளினாலே அந்தக் கைதுக்கு எதிராகச் செயற்பட வேண்டும்.

நன்றி: ராவய

(சிங்களத்தில்: திசரனி குணசேகர, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்)

தமிழாக்கம் நவமணி இனையத் தளத்திலிருந்து…

No comments