மத்தள சர்வதேச விமான நிலையம்!: டாட் டா சொல்லும் எயார் அரேபியா…!
சிறிலங்காவின் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவையை நிறுத்திக் கொள்வதாக, எயர் அரேபியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சார்ஜாவைத் தளமாக கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்சின் தேசிய விமான சேவையான எயர் அரேபியா நிறுவனமே, மத்தள விமான நிலையத்துக்கான சேவையை ஆரம்பித்த முதலாவது வெளிநாட்டு நிறுவனமாகும்.
மத்தள விமான நிலையம் திறக்கப்பட்ட நாள் தொடக்கம் சார்ஜாவுக்கும் மத்தள விமான நிலையத்திற்கும் இடையில் இந்த நிறுவனம் நேரடி சேவைகளை நடத்தி வந்தது.
வாரத்தில் இரண்டுமுறை நேரடி விமான சேவையை எயர் அரேபியா நிறுவனம் நடத்தி வந்தது.
இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், மத்தளவுக்கான தனது சேவையை இடைநிறுத்தியுள்ளது.
முன்னதாக, மே 19ம் நாள் தொடக்கம், வாரத்தில் 4 சேவைகளை நடத்தவும் எயர் அரேபியா திட்டமிட்டிருந்தது.
கடந்த மார்ச் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மத்தள விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments