சாலியின் கைதை எதிர்த்து அம்பாறை முஸ்லீம் பிரதேசங்களில் ஹர்தால்
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.
குறிப்பாக மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்துவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுள்ளது.
இந்த ஹர்த்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள், கடைகள் எவையும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.
இப்பிரதேசங்களில் ராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கடைகளை திறக்க வைப்பதற்கான தீவிர முயற்சிகளில் ராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
(MM)
No comments