அசாத் சாலியின் ஐநா கடிதம் பற்றி எதுவும் தெரியாது என்கிறார் மார்டின் நெசர்கி
தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியின் கடிதம் பற்றி தெரியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கடிதம் எழுதியதாக அசாத் சாலி குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அவ்வாறான கடிதங்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் எனினும் இது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் நெசர்கீ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில் அசாத் சாலி முறைப்பாடு செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments