Breaking News

இரும்புச் சப்பாத்தினால் வடக்கில் நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது! ஜே.வி.பி

military_boots_sri_lankaஇரும்புச் சப்பாத்தினால் வட மாகாண சபை நிர்வாகத்தை அரசாங்கம் நடத்துவதாக ஜே.வி.பி. குற்றஞ்சுமத்தியுள்ளது. நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்குவதே அரசியல் பிரச்சினைக்கு ஒரே தீர்வு எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றிய அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அநுரகுமார திஸாநாயக்க…
வடக்கில் உள்ள மக்களின் மரண வீடாகட்டும், வேறு ஏதாவது நிகழ்வாகட்டும், வேறு ஏதாவது வைபவமாகட்டும், இவை அனைத்தும் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் இல்லாமல் இந்த வைபவம் நடைபெற இயலாதா நிலையொன்று வடக்கில் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பிராந்தியத்தில் இயங்கிவரும் பல ஊடக நிறுவனங்கள் மீது பல முறை தீ வைக்கப்பட்டன. தாக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். இரும்புச் சப்பாத்திற்குக் கீழே வைத்தே இந்த மாகாணத்தில் நிர்வாகம் நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கம் தமது அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு அந்தப் பிரதேசங்களில் காணிகளைப் பகிர்ந்தளிக்க ஆரம்பித்துள்ளது. விடுதிகளை அமைக்க பாரியளவில் காணிகள் வழங்கப்படுகின்றன. அபிவிருத்திப் பணிகளுக்கு அந்த மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்து வருகிறது. உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரிக்க ஆரம்பித்தது. இவ்வாறான நிலையிலேயே இந்த மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள அரசியல் பிரச்சினைக்கு மாகாண சபை தீர்வாக அமையாது. சந்தர்ப்பத்திற்கேற்ப நடிக்கும் நடிகர்கள் கொஞ்சம் பேர் அரசாங்கத்துடன் இருக்கின்றனர். திடீரென இவர்கள் கூச்சலிடுகின்றனர். இவை கோமாளித்தனமான நடிப்பு. மாகாணசபை முறைமை எந்த வகையிலும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்குவதே அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்று அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

(TW)

No comments