அரச தரப்பில் எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை – சட்டத்தரனி சிராஸ்
அசாத் சாலி விடுதலைக்கு முன் அவர் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாப்பஸ் வாங்க வேண்டும் என அரச தரப்பில் வேண்டப்பட்டது. நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்பட வில்லை. சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, அதாவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்த ஒரு அறிக்கையையோ கருத்தையோ வெளியிட வேண்டாம் என வேண்டப் பட்டது என அசாத் சாலியின் சட்டத்தரனி சிராஸ் நூர்தீன் கூறியுள்ளார்.
அத்தோடு, எவ்விதமான மன்னிப்புக் கோரலும் அசாத் சாலி தரப்பிலிருந்து இடம் பெறவில்லை என்றும் அவர் கூறினார். ஏதாவது நிதி மோசடி சம்பத்தமான குற்றச்சாட்டுக்கள் அசாத சாலி மீது சுமத்தப்பட்டுள்ளதா என கேற்கப்பட்டதற்கு, அவ்வாறு எதுவும் இல்லை என கூறப்பட்டது. ஜூனியர் விகடனில் அசாத் சாலி வழங்கிய செவ்வியை திரிபு படுத்தி வெளியிடப்பட்டதாகவும், பின்னர் அது திருத்தப்பட்டதாகவு பின்னர் அவை குற்றப் புலனாய்வுப் புரிவுக்கு சமர்ப்பிக்கப் பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இன்று இரவு BBC தமிழோசைக்கு அசாத் சாலியின் சட்டத்தரனி சிராஸ் நூர்தீன் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறப்பட்டது.
குறித்த செவ்வியை செவிமெடுக்க இங்கே கிலிக் செய்யவும்
No comments