நடுவரை சரமாரியாகத் தாக்கிய மஹிந்தவின் இளைய புதல்வர்!
இலங்கையின் ரக்பி நடுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோகிதவுக்கு எதிராக இலங்கை ரக்பி கால்பந்து யூனியனில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்கள். இறுதியாக இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றில் ரோகித ரக்பி நடுவரான Dimitri Gunasekera என்பவரை மைதானத்தில் வைத்து தாக்கியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
ரோகித ராஜபக்ஸ கொழும்பு Havelock விளையாட்டு மைதானத்தில் மே மாதம் ஐந்தாம் திகதி இடம்பெற்ற போட்டியின் போதே நடுவரைத் தாக்கியுள்ளார். கடற்படையும், பொலிசும் விளையாடிய மேற்படி போட்டியில் கடற்படையின் A அணிக்கு ரோகித கப்டனாக இருந்தார். மேற்படி போட்டியில் கடற்படை அணி தோல்வியைச் சந்தித்த நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மற்றைய நடுவர்கள் தடுத்த காரணத்தால் Dimitri Gunasekera படுகாயங்களுடன் தப்பித்ததாக போட்டியை நேரில் பார்த்தவர்கள் கூறினர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து போட்டிகளை நடாத்த நடுவர் மறுப்பு தெரிவித்தார்.
ரோகித ராஜபக்ஸ மன்னிப்புக் கேட்டால் தான் அடுத்த போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற முடியும் என்று நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் மன்னிப்புக் கேட்க ரோகித மறுத்துவிட்டார்.
இலங்கை ரக்பி கால்பந்து யூனியனைச் சேர்ந்த Asanga Seneviratne கருத்து தெரிவிக்கையில், தக்க முறையில் விசாரணைகள் செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றார்
No comments