Breaking News

யாத்திரை செல்வது போன்று வழக்கு விசாரணைகளுக்கு செல்கின்றேன்!- சரத் பொன்சேகா

sri-lanka-court-jails-former-army-chief-sarath-fonseka-0 யாத்திரை செல்வது போன்று வழக்கு விசாரணைகளுக்கு செல்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களுக்கு செல்கின்றேன். சில மேன்முறையீடுகள், சிலவை தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுகின்றன. போலிக் குற்றச்சாட்டு சுமத்தி சிறைத்தண்டனையும் அனுபவித்தேன். இதுவே தற்போது நமது நாட்டின் நிலைமையாகும். வழக்கு விசாரணைகளில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது. படுகொலையாளிகள், பாலியல் குற்றவாளிகள் போன்றவர்கள் விடுதலையாகின்றனர் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஆசனம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் செய்திருந்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகளில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments