Breaking News

சீ.ஐ.டீ. யிட பொன்சேகா என்ன கூறினார்…?

sarath-fonseka2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இராணுவத்தலைமையகத்தில் வைத்து, முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்படமை தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (16) பிற்பகல் 2.55 முதல் மாலை 6.30 மணி வரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் சான் அபேசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் அதிகாரிகள் சரத் பொன்சேக்காவின் தலைமையகத்தில் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி இராணுவத் தலையகத்திற்கு முன்னால், விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 7 வருடங்களின் பின்னரே முதன்முறையாக சரத் பொன்சேக்காவிடம் இவ்வாறானதொரு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்கப்பட்டபோது சரத் பொன்சேக்கா தனது நீண்ட விளக்கத்தை முன்வைத்துள்ளார். அவற்றில் முக்கியமாக,

”சித்திக் என்பவர் எனது அலுவலகத்தில் பணியாற்றியவர் அல்ல. எனது படைப் பிரிவைச் சேர்ந்தவரும் அல்ல. இவரை யார் அழைத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. எனினும், தற்போதைய இராணுவத் தளபதியின் படைச் சிப்பாய் என்பது பின்னர் தெரியவந்தது. தற்போதுள்ள இராணுவத் தளபதி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இராணுவத்தைப் பயன்படுத்தி என்னைக் கைதுசெய்வதற்கும், கொலை செய்வதற்கும் இராணுவப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார். இவற்றை நான் பாராளுமன்றத்தில் இருந்தபோது பகிரங்கப்படுத்தினேன்.

சித்திக் என்பவர் என் மீதான தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் எனக்குத் தெரியப்படுத்தினார். சித்திக் உள்ளிட்டக் குழுவினருக்கு இவ்வளவு இலகுவாக இந்தத் தாக்குதலை எவ்வாறு நடத்த முடிந்தது என்பது குறித்து எனக்கு சந்தேகம் ஏறப்ட்டது.

எனினும், இதனை உறுதிப்படுத்துவதற்கு சித்திக்கின் சம்பவம் மாத்திரம் போதுமானதாக இருக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து இன்னும் சிலர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்கள் இராணுவத்தில் அல்லது இராணுவத்திற்கு நெருக்கமாக இருக்கக்கூடும். இவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

எனினும், குண்டுத் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலி குண்டுதாரிக்கும் எனக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களில் ஒருவரான மகிந்தானந்த அளுத்கமமே நாடாளுமன்ற விவாதமொன்றின்போது தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையினால் இதற்குப் பலிவாங்குவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்த கூற்றின் மூலம் ஒன்று உறுதியாகிறது. தாக்குதல் சம்பவத்தை மறைப்பதற்கான முயற்சில் அரசாங்கத்திலுள்ள அதிகாரம் படைத்தவர்கள் சிலர் இருப்பது இதன்மூலம் புலனாகியது.

இன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கே.பி., தயா மாஸ்டர் உள்ளிட்டோர் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் மிகப் பாதுகாப்பாக இருக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி வடக்கு மக்கள் அந்தத் தேர்தலை புறக்கணிப்பதற்காக அரசியல்வாதிகள் தலையீடு செய்திருந்தனர். அவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதலுக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது” என சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால், இராணுவத் தலைமையகத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள் :

பொன்சேகாவிடம் சீ.ஐ.டீ. வாக்குமூலம்

කොටි වෙමෙයි මට බෝම්බ ගැහුවේ ජනාධිපතියි ගෝථාභයයි

No comments