நாம் ஒரு போதும் அடிப்படைவாதிகளாக மாறியது கிடையாது: ஜனாதிபதி
பௌத்தர்கள் என்ற வகையில் நாம் ஒரு போதும் அடிப்படைவாதிகளாக மாறியது கிடையாது. எல்லா மதங்களையும் சுதந்திரமாக பின்பற்றும் நிலையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற ஒரு சமய நிகழ்வொன்றின் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டைப் பொறுத்த வரை சமய சகவாழ்வு என்பது மிக முக்கியம். அதனை ஏற்படுத்த அனைவரும் துணைபுரிய வேண்டும்.
பௌத்த மதம் சீர்குலையும் போது சகவாழ்வும் சீர்குழையும். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சக வாழ்வை ஒழிக்க முயற்சி செய்கின்றன. நாட்டில் எந்த மதத்திற்கும் விஷேட இடம் கிடையாது என்ற நிலைமையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.
அனேக நாடுகளில் மதரீதியான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது நாட்டில் அப்படியான நிலை கிடையாது. எந்த மதப்பிரிவினரும் சுதந்திரமாக வாழும் நிலை இந்நாட்டில் காணப்படுகின்றது என்றார்.
(VD)
No comments