மேற்குலக நாடுகளிடம் நிதி பெற்றுக் கொண்டதை நிரூபிக்க முடியுமா?: பொதுபல சேனா சவால்
மேற்குலக நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவதாக அதன் செயலாளர் கலபோடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நோர்வே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் பொதுபல சேனா நிதி திரட்டியதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தார்.முடிந்தால் இதனை நிருபிக்கும் படி, வீரவன்சவுக்கு தாம் சவால் விடுவதாகவும் அமைப்பின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைப்பு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் தேரர் கூறியுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவன்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா குறித்து விமல் வீரவன்சவைப் போல சிலர் கூறிய விடயங்கள் அனைத்தும் பொய் எனவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments