Breaking News

அசாத் சாலி குடும்பத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!

2எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டும்,

திரு. அசாத் சாலி அவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட செய்தி கோட்டு கவலை கொண்டவர்களுள் நானும் ஒருவனாக இருக்கிறேன், அவர் தொடர்பாக உன்மையிலேயே எம்முல் ஒரு பெரிய மரியாதையும், அன்பும் ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது! அவரின் விடுதலைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் தினமும் நாம் பிரார்த்தித்தோம்.

ஏனென்றால், இலங்கை முஸ்லிம்களுக்கு நடாத்தப்பட்டு வந்த அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்ட ஒரே முஸ்லிம் அரசில்வாத் திரு சாலி மட்டுமே. அதற்கான சக்தியை அல்லாஹ் அவருக்கு இனியும் வழங்குவானாக! இதனால் அசாத் சாலி அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மனதில் அலாதியான ஒரு இடத்தைப் பிடித்தார். எந்த அளவுக்கு என்றால், அவரை இவ்வளவு காலமும் விமர்சித்த பலரும் இன்று அவரை பாராட்டும் நிலையை கண்கூடாகக் கான்கின்றோம், அதுமட்டுமல்லாது அவரை விமர்சித்த சில இஸ்லாமிய இயக்கங்கள் கூட அவர் சார்பாக பேசக் கூடிய அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவை அனைத்தும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்த ஒரே காரனத்திற்காகவே கிடைத்தது.

என்றாலும் கடந்த 05.05.2013 அன்று சிரச தொலைக்காட்சி செய்தியில் காட்டப்பட்ட காட்சிகள் எம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது. மேலும் நீங்கள் அன்று செய்த செயல் உங்களிடமுள்ள அல்லாஹ் மீதான நம்பிக்கையைக் கேள்விக் குறியாக்கியது. ஏனென்றால் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவனிடம் நாம் எமது தேவைகளைக் கேற்போமாயின் அது “ஷிர்க்” எனும் இனை வைத்தல் ஆகும். அதனைப் பற்றி அல்லாஹ் தனது குர் ஆனில் இவ்வாறு கூறுகின்றான்

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!‘ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (39: 65,66)”

“இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்து கிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (6: 88)”

மேலும் இதன் பாரதூரத்தை நீங்கள் அறியாது செய்திருந்தால்,  நீங்கள் அல்லாஹ்விடம் மண்ணிப்புக் கேற்கும் போது அல்லாஹ் உங்களை மண்ணிப்பான். இல்லாவிட்டல் அது உங்கள் நன்மைகள் யாவற்றையும் அழித்து விடும். மேலும் அல்லாஹ் குர் ஆனில் “தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (4: 116)” என்று கூறுகின்றான்.  இது இஸ்லாத்தின் புறத்தில் இருந்து சொல்லப்படும் தீர்ப்புகள். அல்லாஹ் எம் அனைவரையும் கொடிய ஷிர்கிலிருந்து பாதுகாப்பானாக.

கடந்த 05.05.2013 அன்று கங்காராம விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் காரனமாக, எந்த அளவு வேகமாக மக்கள் அசாத் சாலி மீது அனுதாபம் செழுத்த ஆரம்பித்தார்களோ, அதே வேகத்தில் அந்த அனுதாபம் குறைந்து செல்வதையும் நாம் இன்று கான்கின்றோம்.

அத்தோடு, திரு. சாலி அவர்கள் எந்த இஸ்லாத்துக்காக பேரினவாதிகளுடன் வாக்குவாதப் பட்டார்களோ. அதே பேரின வாதிகள் உங்கள் இந்த செயலால் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தவும் செய்கின்றார்கள். (அதற்கான படங்களை இங்கே இணைத்துள்ளேன், இவை பேரினவாதிகளால் Facebook இல் பரப்பப்படும் செய்திகள்.). இதனால் அசாத் சாலி அவர்களின் முயற்சிகள் பயனற்று போய்விட இடமுண்டு.

943195_443901242368450_1541402573_n

482439_444243955667512_2022784038_nமனிதனுக்கு என்ன சோதனை வந்தாலும் அதனை அல்லஹ்விடமே கேற்க வேண்டும், கடந்த வாரம் உங்கள் குடும்பத்தினர் அசாத் சாலிக்காக நோன்பு நோற்கும் படி வேண்டியிருந்தீர்கள். அது உன்மையிலேயே மிகவும் வரவேற்கத்தக்க அகிம்சைப் போராட்டம். இவ்வாறான மார்க்கம் அனுமதித்த வழிமுறைகளைக் கடைப் பிடிப்பீர்களானால் அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்கு உதவுவான். இல்லாவிடில் இது போன்ற மாற்று நடவடிக்கைகள் மனிதர்களை நஷ்டத்திலேயே அழ்த்திவிடும்.

இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு நாம் உங்களைப் பார்த்து கூறுவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும்,  நாம் இன்று இவ்வாறு சொல்லாவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் குற்றவாளிகளக நிறுத்தப்படுவோம்.

இப்படிக்கு,

இஸ்லாமிய சகோதரன்.

(இயன்றவர்கள் இதனை அவர்களுக்கு எத்தி வையுங்கள்)

2 comments:

  1. நல்ல எண்ணத்தில் தூய மனதுடன் கூறப்பட்ட ஒரு மூமீனின் அறிவுரையாகவே இதனை காண்கிறேன் தவறு செய்வது மனித இயல்பு வஹ்ஹாபிகளை போன்று இல்லாமல் மிகவும் நாகரீகமான முறையில் தவறினை சுட்டிக் காட்டியுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. "மனிதன் மறதிக்கும், தவறுக்கும் மத்தியில் படைக்கப் பட்டுள்ளான்" இதனை விமர்சிக்கு முன் நினைவில் கொள்வது சிறந்தது. ஒன்றை கண்டவுடன் விமர்சிப்பதை விட அதனை அழகிய முறையில் சொல்வதே சிறந்த நடைமுறையாகும். இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையும் கூட.

      ஜஸாகுமுல்லாஹ்.

      Delete