மஹாஸெனா புயலால் மியான்மர் முஸ்லிம்கள் தவிப்பு - பலர் பலி!
மியான்மர்: மஹாஸென்புயல் எதிரொலியாக மியான்மரில் படகு ஒன்று கவிழ்ந்ததில் பலர்பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மஹாஸென் புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாக்டாவ் நகர் அருகே ரோகிங்யா முஸ்லிம்கள் 100 பேருடன் சென்ற படகு, பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு பௌத்தர்களால் தாக்கப் பட்டு ஏராளமான முஸ்லிம்கள் உயிரிழந்ததோடு வீடுகளையும் இழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments