Breaking News

வட மாகாண சபைத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுமா?

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டால் முஸ்லிம்களின் ஆதரவை இழக்க வேண்டி வரலாம் என கட்சியின் முக்கியஸ்தர்கள் தலைமைத்துவத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக மு.கா. உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள கட்சியின் உயர்பீடக் கூடத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய கட்சிகள் வட மாகாண சபைத் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருவதுடன் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளன. முஸ்லிம் காங்கிரசும் நாளைய தீர்மானத்தின் பின்னர் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

(VD)

No comments