நான் ஒழிந்திருக்கிறேன், அரசாங்கம் என்னை பின்னால் துரத்துகிறது – அசாத் சாலி
பாதுகாப்புப் பிரிவால் தன்னை கைது செய்யும் திட்டமொன்று இருப்பதால் தாம் ஒழிந்திருப்பதாக தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி அவர்கள் கூறுகிறார்.
அசாத் சாலி அவர்கள் தற்போது தலைமரைவாகவே இருக்கிறார்,
நேற்று News 1st இற்கு வழங்கிய
செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த சில காலமாக என்னை கைது செய்வதற்கான முயற்சி செய்கின்றனர். SMS (குருந்தகவல்) அனுப்பினேன் என்கிறார்கள், பயங்கரவாதத்துக்கு உதவி செய்ததாகச் சொல்கின்றனர், அல் கைதா என பல்வேறு குற்றச் சாட்டுக்களை என் மீது சுமத்தி பல முறை என்னை கைது செய்ய இந்த அரசு முயற்சிக்கின்றது. நான் எப்போதும் சரியானதையே பேசினேன். நீங்களே உதரவாதம் வழங்கிய “13 ப்லஸ்” ஐ வழங்குங்கள் என்று கூறுகிறேன், “எல்.எல்.ஆர்.சீ.” ஐ நடைமுறைப் படுத்துங்கள் என்று கேற்கிறோம். நாம் இவற்றை சொல்லும் போது அரசாங்கத்திற்கு வலிக்கிறது. அதனால் ஏதாவது குற்றச்சாட்டைப் போட்டு அசாத் சாலியை கைது செய்யப் பார்க்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒழிந்திருக்கின்றேன், எனது உயிருக்கு ஆபத்து இருக்கின்றது” என அவர் கூறினார்.
No comments