எனது அடுத்த கட்டம்–அன்வர் மனதுங்க
அன்வர் மந்துங்க புலொக் தடை செய்யப்பட்டமை தொடர்பாக சிலர் சந்தோஷப் படுகின்றனர். அது அவர்கள் பல்வேறு இனையத்தளங்களில் இட்டுள்ள தகவல்களினால் விளங்கிக் கொள்ள முடிகிறது. என்றாலும் நான் இதனை ஒரு சாதகமான கோனத்திலேயே நோக்குகிறேன். மேலோட்டமாக நோக்கும் போது பாதகமாகத் தோன்றினாலும் காலம் தள்ளியேனும் ஒரு சாதகமான சூழலை கான முடிகிறது. அதற்காக பொறுமையாகவும் சிறந்த முறையில் திட்டமிட்டும் செயற்பட வேண்டும் என்பது எனது என்னமாகும். அன்வர் மனதுங்க Blogஐப் போலவே அரசிற்கு தலையிடியான பல இனையத் தளங்கல் இதற்கு முன்னரும் தடை செய்யப்பட்டன. அவற்றில் சில தளங்கள் முழுமையாகவே மறைந்தாளும், சில இன்றும் இயங்குகின்றன.
அரசாங்கம் இவ்வாறு அநீதி இழைக்குமாயின், நாம் செய்ய வேண்டியது அரசாங்கம் செய்யும் அநீதிகளுக்குப் பதில் கொடுப்பதாகும். அதற்கு மிகச் சிறந்த பதில் யாதெனில் இனையத் தளத்தை தொடர்ந்தும் நாடாத்திச் செல்வதும், அதன் கருத்துக்களை மக்களுக்குச் சென்றடைய வழி செய்வதுமாகும். நாம் முதலில் செய்ய வேண்டியது வாசகர்களுக்கு இந்த தடைகளைத் தாண்டி இனையத் தளத்திற்கு பிரவேசிக்கக் கூடிய சந்தர்ப்பங்களை அதிகரிப்பதாகும். அதற்காக தடை செய்யப்பட்ட தளங்களுக்கு அவர்கள் பிரவேசிக்கக் கூடிய வழிமுறைகளை காட்டிக் கொடுத்தல் வேண்டும். இது தொடர்பாக தொழிநுட்ப அறிவுள்ளவர்கள் முன்வருதல் வேண்டும் என்பது எனது கருத்தாகும். தடை செய்யப்பட்ட இனையத் தளங்களுக்கு பிரவேசிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக சிறு Postகள் மூலம் Facebook போன்ற தளங்கள் மூலம் பிரசாரம் செய்ய முடியும். அதற்காக திறமை உள்ளவர்கள் முன்வருமாறு நான் வேண்டிக் கொள்கிறேன்.அது தொடர்பாக உங்கள் கருத்துக்களை, ஆக்கங்களை anvermanatunga@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புங்கள்.
பலரும் என்னிடம் வேண்டிக் கொண்டது, Facebookகில் எனது ஆக்கங்களைப் பதியும் படியாகும். என்றாலும் அது தொடர்பாக எனது எந்த என்னமும் இல்லை. அது உன்மையிலேயே அடுத்தவரின் இடத்தில் கூடு கட்டுவதைப் போன்றதாகும். எப்போதாவது ஒரு நாளில் அந்த இடம் நமக்கு இல்லாமல் போய்விடக் கூடும். நாம் அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு ஒரு நாள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு செல்ல நேரிட்டால்! அதனால் நமது இனையத் தளத்திற்கு விஜயம் செய்வது எவாறு என Facebook இல் மக்களை அறிவூட்டுவதாகும் என்பதே எனது கருத்து. மேலும் Facebook இல் Proxi மூலம் எமது தளத்திற்கு விஜயம் செய்வது எவ்வாறு என ஆக்கங்களை பதிவு செய்ய எதிர் பார்க்கிறேன்.
எனதி தளத்துடன் இருந்த அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்வது, இப்போது உங்கள் நேரம் வந்து விட்டது. தடை செய்யப்பட்ட தளங்களுக்கு செல்வதற்கான முறைகளைக் தேடுங்கள். அது தொடர்பாக ஆக்கங்களை எனக்கு அனுப்புங்கள். அதே போல இயன்ற அளவு வாசகர்களையும் தெளிவு படுத்துங்கள். இனவாதத்தை தூண்டும் மற்றும் இனவாத்தத்தை எதிர்க்கும் நம் போன்றவர்களுக்கு வேளி அமைக்கும் இந்த அராஜக ஆட்சி களையும் வரை, இன்ஷா அல்லஹ்! மேலும் அன்வர் மனதுங்க Blog ஐ நாம் தொடர்ந்தும் நடாத்திச் செல்வோம் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்!
அன்வர் மனதுங்க
இது මගේ ඉදිරි පියවර எனும் தலைப்பில் அன்வர் மனதுங்க அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின், தமிழ் வடிவம். அவரின் வேண்டுதலின் அடிப்படியில் மொழி பெயர்க்கப்பட்டது.
இந்த தளத்திற்கு செல்வதற்கு http://4freeproxy.com எனும் தளத்திற்கு சென்று அங்கு இந்த தடை செய்யப்பட்ட தளத்தின் முகவரியை கொடுப்பதன் மூலம் தளத்தை பார்வையிட முடியும்.
No comments