நுவரெலியா வசந்தகால சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஏப்ரல் மாதத்திலிருந்து நுவரெலியாவில் வசந்தகாலம் ஆரம்பித்துள்ளநிலையில் தற்போது அங்கு வருகின்ற சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகரசபை அறிவித்துள்ளது.
நுவரெலியாவுக்கு செல்லவேண்டாம் என அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் மூலம் வதந்திகள் பரவியதாலேயே சுற்றுலா பயணிகளின் வரவில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நுவரெலியாவிலுள்ள வாடகை வீடுகள் தற்போது வெறுமைாக இருக்கின்றன. கடந்தவரும் அவை முழுமையாக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் முடியுமானவரை தங்களது சுற்றுலாப் பிரயாணங்களை குறைத்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாக அறிக்கை வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜம்மியத்துல் உலமா விடுத்திருந்த அறிக்கையின் முழுமைான விபரம் வருமாறு;
எதிர்வரும் விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பிரயாணங்கள் செல்ல உத்தேசித்துள்ள முஸ்லிம்கள் முடியுமான வரை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறும், அவ்வாறு செல்பவர்கள் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வழமை போன்றே இம்முறையும் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கிறது.
கடந்த காலங்களில் இவ்வாறான சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டவர்களிற் சிலர் இஸ்லாத்திற்கு முரணான காரியங்களிலும், வீணான பிரச்சினைகளிலும் சம்பந்தப்பட்டதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான எவ்விதமான செயற்பாடுகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இந்நாட்டில் அமைதியைக் குழுப்பும் சக்திகளுக்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகள் இடம்பெறா வண்ணம் அவதானமாக நடந்து கொள்வது பற்றி பொது மக்களுக்கு வழிப்பூட்டுமாறு கதீப்மார்களையும் இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் நிறவனங்களையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
நன்றி : நவமணி
No comments