நுவரெலியா வரவேண்டாம் எஸ்.எம்.எஸ்.
நுவரெலியாவில் இடம்பெறும் புத்தாண்டு வசந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை என நுவரெலியா பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கூறியுள்ளது.
நுரெலியா ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன சபை தலைவர் மற்றும் நகர சபை உருப்பினர் மொஹமட் ஃபலீல் அவர்கள் கூறுவதாவது, முஸ்லிம்களுக்கு இம்முரை வசந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என பரவி வரும் SMS ஒரு வதந்தி என அவர் கூறியுள்ளர்.
நுவரெலியாவில் இடம்பெறும் புத்தாண்டு வசந்த கொண்டாட்டங்களை குழப்புவதற்காக சிலர் அனுப்பும் SMS இன் மூலம் செய்யும் முயற்சிக்கு ஏமார்ந்து விட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயளாலர் உற்பச நகர பிரதானிகள் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. கழியாட்ட நிகழ்வுகளில் முஸ்லிம்களை நுவரெலியாவுக்கு வர வேண்டாம் என குறிப்பிட்டே இந்த SMS அனுப்பபட்டுள்ளது என மாவட்ட செயளாலர் திரு. பீ.ஜீ. குமாரசிரி அவர்கள், நகர பிதா மஹிந்த தொடம்பேகம அவகள், உதவி பொலிஸ் மா அதிபர் ஆனன் விஜேசூரிய ஆகியோர் குறிப்பிட்டனர்.
இது ஒரு நாசகார வேளையென்றும், அதனைப் பொருப்படுத்தாமல் முஸ்லிம்கள் கலியாட்டத்தில் கலந்து கொள்ளும் படி மாவட்டா செயளாலர் முஸ்லிகளிடம் வேண்டிக் கொண்டார்.
நுவரெலியாவுக்கு வரும் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படியினரும், பொலிசாரும் செயற்படுவதாக நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட செயளாலர், நகர பிதா மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிட்டனர்.
நுவரெலியா புத்த சாசன பாதுகாப்பு குழுவின் பதிவாளர் மொரபே குசலஞான தேரர் உரையாற்றுகையில், நுவரெலியாவில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிகள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதாகவும், SMS செயற்பாடு ஒரு நாசகார வேளையெனவும் கூறிய அவர், நுவரெலியாவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு எந்த இடைஞ்சலும் நடக்காது என அவர் கூறினார்.
(srilankamirror.com செய்தியின் தமிழாக்கம்)
No comments