Breaking News

தெவனகலவை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்கக் கோரி பிக்குகள் உண்ணாவிரதம்

kuragala1தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி மாவனெல்லை நகரில் பிக்குகள் 8 பேர் சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம,மாகல்கந்தே சுதத்த,ரத்னபுரே நந்தாலோக,மெதிரிகிரியே புண்யாஸார,அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த,திரியாயே சீலரதன,மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

தெவனகல புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத நிகழ்வில் பெரும் தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

இந் நிலையில் தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாத்து தரக் கோரியும், புனித பிரதேசத்துக்கு உட்பட்ட இடங்களில் உள்ள முஸ்லிம்களை வெளியேறக் கோரியும் கூடியிருந்த பொதுமக்கள் கோசங்களை எழுப்பினர்.

பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

kuragala1kuragala2kuragala3

மூலம் : விடிவெள்ளி | படங்கள் : லக்பிம

No comments