அபிவிருத்தி என்ற பெயரில் ஆட்சியாளர்கள் சுரண்டுகின்றனர்! ரணில்
அபிவிருத்தி என்பது மக்களை மேம்படுத்துவதே ஆகும் என்றும் எனினும், அபிவிருத்தி என்ற பெயரில் ஆட்சியாளர்கள் சுரண்டிப் பிழைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,
”அபிவிருத்தி என்பது மக்களை மேம்படுத்துவதாகும். எனினும், ராஜபக்ஷ ஆட்சியில் ஆட்சியாளர்கள் தம்மை மேம்படுத்தி, மக்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர். ஹம்தோட்டையில் துறைமுகம் இருக்கிறது, கப்பல்கள் இல்லை. நுரைச்சோலையில் அனுமின் நிலையம் இருக்கிறது, மின்சாரம் இல்லை. மத்தல விமான நிலையம் இருக்கிறது விமானங்கள் இல்லை. வீதிகள் நிர்மாணிக்கின்றனர், வாகனங்கள் இல்லை. வானில் செல்ல மார்க்கம் இருக்கிறது. தரையில் செல்ல மார்க்கம் இருக்கிறது. இவை நிர்மாணிக்கப்படும்போது இவற்றில் ஒரு பங்கு யாருடையவது பைகளுக்குச் செல்கின்றன. அவர்கள் நிர்மாணிக்கின்றனர். அவர்கள் பணத்தை சுரண்டுகின்றனர். எனினும், அவற்றை மீளச் செலுத்துமாறு எங்களுக்குக் கூறுகின்றனர். தற்போது நீதவான் ஒருவரையும் ஊழல் குற்றச்சாட்டில் பிடித்துள்ளனர். இவற்றை யாருக்குச் சொல்வது! அதனால்தான் ராஜபக்ஷ கூட்டணியை விரட்ட வேண்டுமென கூறுகின்றோம். அதன்பின்னர் புதிய அரசியலைப்பை நிறைவேற்ற வேண்டும்.” என்று கூறினார்.
No comments