Breaking News

கஸினோவுக்கு எதிராக பொதுபல சேனா குரல்கொடுக்காதது ஏன்? அசாத் சாலி

azath ஹலால் மற்றும் மாடு வெட்டுவதற்கு எதிராக சத்தமிடும் பொதுபல சேனா மற்றும் அமைப்புக்கள் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக ஏன் குரல்கொடுக்கவில்லை என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஹலால் மற்றும் மாடுவெட்டுவதற்கு எதிராக குரல்கொடுக்கும் பொதுபல சேனா, ராவணா பலய, விமல் மற்றும் சம்பிக்க ஆகியோர் லேக்கவுஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள கஸினோவுக்கு எதிராக ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த இடத்தை கஸினோவுக்காக பிரபல கஸினோக்காரர் பாக்கருக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அவர்கள் இதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க முன்வந்தால் நாங்களும் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments