நாட்டில் கடும்போக்குவாதிகளுக்கு ஆதரவில்லை!- ஜனாதிபதி
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடும்போக்கு வாதம் கடைப்பிடிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாகொல்லகம பகுதியில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொது பல சேனா அமைப்பை அரசாங்கம் ஆதரிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் கடும்போக்கு வாதிகள் யாரையும் அரசாங்கம் ஆதரிப்பதில்லை. பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் கடும்போக்குவாதிகள் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 2ம் திகதி விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் 31 பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான அசம்பாவிதங்கள் இனி நாட்டில் நடைபெறாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments