Breaking News

டெங்கு யுத்தத்துக்குத் தயாராகிறார் கோதாபய..

Gotabhaya_Rajapaksa கொழும்பு நகரை மற்றும் அண்டிய பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெங்கு ஒழிப்புப் பணிகளில் பொலிஸ், இராணுவ, சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற விஷேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சுகாதார சேவை அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

கொழும்பிலுள்ள பிரபல கல்லூரிகள், அரச, தனியார் நிறுவனங்கள் உட்பட கேந்திர நிலையங்கள் டெங்கு நோய் பரப்பும் இடங்களாக மாறியுள்ளன. இதனைக் கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்புக்கான தீவிர நடவடிக் கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு நுளம்பினைப் பரப்பும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போர் மீது தராதரம் பார்க்காது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் கொழும்பு நகரிலுள்ள பாடசா லைகள், அரச தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், வீடுகள் போன்றனவற்றைக் கண்காணிக்கும் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்பு பரவும் வகையில் செயற்படுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments