கூரகல் (ஜெய்லானி) அதிகாரிகளுக்கு பொதுபல சேனவினார் எச்சரிக்கை
எதிர்வரும் மே மாதம் 18ம் திகதிக்கு முன்னர் கூரகலையில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றாவிட்டால் 5000 பேர் கொண்ட குழுவொன்றுடன் இப்பிரதேசத்தை சுற்றிவளைப்பதாக பொது பல சேனாவின் பிக்கு ஒருவரும் வேறு அலுவலர் ஒருவரும் நேற்றைய தினம் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கிருந்த அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என தெரிய வருகிறது.
பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ இலட்சினையுடன் கூடிய வேன் ஒன்றில் வந்த இந்த குழுவினரில் கண்டி மற்றும் பெபிலியான விஹாரைகளின் பிக்குகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துக் கூறிய கூரகல திவாகுஹாவ விஹாரையின் தலைமை பிக்கு பன்டித வடத்தர ஞானிஸ்ஸர தேரர், நாட்டின் சட்டத்திற்கும், பௌத்த சட்டத்திற்கும் அமைவாக கூரகலயை பாதுகாக்கும் முயற்சிகளை சுமார் 30 வருடங்களாக எடுத்து வந்ததாகவும், வெற்றி கிட்டவுள்ள சந்தர்ப்பத்தில் வெளி அமைப்புக்கள் இதில் பிரச்சினைகளை உண்டாக்க முனைவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
(LCN)
No comments