பலஸ்தீன மக்களில் அரைவாசிப் பேர் அகதிகளே: தூதுவர் அன்வர் அல் அகா
கடந்த 65 வருடங்களாக சுதந்திரத்துக்காகப் போராடிவரும் பலஸ்தீன மக்களில்அரைவாசிக்கு மேற்பட்டோர் இன்றும்,அகதி முகாம்களில் மிகப் பரிதாபகரமான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகா கூறினார்.
பலஸ்தீன அல் நக்பா தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலேஅவர் இதனைத் தெரிவித்தார்.
ஒருகோடியே 60 இலட்சம் பலஸ்தீன மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் நாட்டுக்குள்ளும் லெபனான்,சிரியா போன்ற நாடுகளில் மிகப் பரிதாபமான முறையில் வாழ்க்கை நடாத்தி வருகிறார்கள்.
பலஸ்தீனர்களுக்கு உலகநாடுகளின் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஆனால்,அமெரிக்க நிர்வாகம் பலஸ்தீனர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்குதடையாக செயற்பட்டு வருகின்றது. பலஸ்தீனர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக இலங்கை அளித்துவரும் ஆதரவு மகத்தானது.
இலங்கையைப் போன்று ஏனைய நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும். மிகவிரைவில் சுதந்திர பலஸ்தீன் உருவாகும் என்ற நம்பிக்கையிலே நாம் வாழ்ந்து வருகின்றோம்.
அமெரிக்காவின் மத்தியஸ்துடன் நடத்தப்படும் பேச்சுவார்ததைகளில் நாம் ஏமாற்றப்பட்டுள்ளளோம். இஸ்ரேலியர்கள் எமதுஉயிருடன் விளையாடுகிறார்கள்.
பலஸ்தீன இலங்கை ஒருமைப்பாட்டு இயக்க உப தலைவர் என்.எம்.அமீன் கருத்துத் தெரிவிக்கையில்,
65 வருடங்களாகபலஸ்தீனர்களதுபிரச்சினை நீடித்து வருகிறது.இந்தநிலைமை தொடருவதையிட்டு ஜனநாயகத்தைமதிப்போர்,சுதந்திரத்தை மதிப்போர் வெட்கப்படவேண்டும்.
உலகில் 135 நாடுகளின் அங்கீகாரத்துடன் பலஸ்தீனத்துக்குஐ.நாவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரபலஸ்தீனத்தைஉடன் உருவாக்குவதற்குசுதந்திரத்தைமதிக்கும் சகலரும் உதவவேண்டும்.
பலஸ்தீனர்களது சுதந்திரத்துக்காக இலங்கையில் மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் உதவிவந்துள்ளன. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தில் வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதுஆரம்பித்து அவர்களுக்காகக் குரல் கொடுத்துவந்தார். இன்று இலங்கையில் இஸ்ரேலியர்களின் தலையீடு அதிகரித்துள்ளது குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. இலங்கைபலஸ்தீனஒருமைப்பாட்டு இயக்கத்தின் இணைச் செயலாளர்களானநந்தகருதனதிரிமற்றும் ஹமீத் அப்துல் கரீம் ஆகியோரும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
No comments