முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன என்று அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே தேவபொட்ட சோரத் தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எல்லாச் சமூகங்களிலும் குழப்பங்களை உண்டு பண்ணக்கூடிய சிறு சிறு குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்மையில்லாத குழப்பவாதிகளான அவர்கள் அழிந்து விடுவர். இதற்காக நாம் சமாதானத்தைக் காப்பதிலிருந்து விலகி நிற்கக் கூடாது என்றார்.
முஸ்லிம் பெண்களின் ஆடை உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும்: தேவபொட்ட சோரத் தேரர்
Reviewed by RAAAIPSL
on
12:43 AM
Rating: 5
No comments