கடும்போக்கைத் தூண்டுவோர் தொடர்பில் அரசாங்கம் கண்காணிக்கும்!- கோத்தபாய ராஜபக்ச
கடும்போக்கைத் தூண்டுவோர் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் தேசியக கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி மட்டுமன்றி கடும்போக்குவாதத்தை தூண்டும் ஏனைய நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதம் ஏந்திய போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இளைஞர்களின் பருவக் கோளறாக இந்த போராட்டத்தைக் கருதினார்.
எனினும், இறுதியில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தையும் கொலை செய்தார்.
தமிழகத்திற்கு சென்று அசாத் சாலி வெளியிட்ட கருத்தின் காரணமாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்புச் செயலாளராக தாம் கடமையாற்றும் வரையில் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை.
அசாத் சாலியினால் பிரபாகரனாக உருவாக முடியாது, பிரபாகரன்கள் உருவாகுவதற்கோ அல்லது உருவாக்கப்படுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.
அசாத் சாலி கைத செய்யப்பட்டமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் பற்றியும் நாம் நன்றாக அறிவோம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments