Breaking News

அரசாங்கம் செய்யும் பாவங்களுக்கு “இடி விழட்டும்”! சாபமிட்ட விக்ரபாகு

Wickramabahu-Karunaratneமக்களுக்குக் கொடுக்கும் துன்பங்களுக்காகவும்,மக்களுக்கு செய்யும் பாவங்களுக்காகவும் மகிந்த அரசாங்கத்தின் மீது இடி விழட்டும் எனவும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்காவிடின் நாசமாகப் போக வேண்டும் என்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன சாபமிட்டுள்ளார்.

மின் கட்டண அதிரிப்பிற்கு எதிராக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்துரைத்த விக்ரமபாகு கருணாரத்ன,

”மக்களுக்கு இவர்கள் செய்யும் துன்பத்திற்காக இவர்களுக்கு இடிவிழ வேண்டும். நாம் இரண்டில் ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்கு இன்று வீதியில் இறங்கியிருக்கிறோம். இது இத்துடன் நிறுத்தப்படமாட்டாது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவில்லையெனில் நாசமாகப்போ என்பதைக் கூறுவுதற்காகவே நாம் இன்று வீதியில் இறங்கினோம்” என்று விக்ரபாகு கருணாரத்ன தெரிவித்தார்.”

No comments