Breaking News

பாக்கிஸ்தானால் தேடப்படும் நபர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்

PAKISTAN-Lahore-EN_1பாகிஸ்தானால் அரசாங்கத்தால் தீவிரவாதி என கூறி தேடப்பட்டு வந்த ஒருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

34 வயதான நிசார் அஹ்மட் என்ற இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி இலங்கை வந்தப்பின்னர் மீண்டும் போலியான வீசா ஒன்றின் மூலம் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் ஆந்திர பிரதேசத்தில் உரிய விசா அனுமதியின்றி வசித்து வந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி இந்திய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் விரைவில் இலங்கை அதிகாரிகளால் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பி.டி.ஐ. செய்திசேவை தெரிவித்துள்ளது.

No comments