Breaking News

அசாத் சாலியை விடுதலை செய்ய மன்னிப்பு சபை கையெழுத்து போராட்டம்

amnestyintl_logo__2இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதி அசாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சர்வதேச மன்னிப்பு சபை, Release or Charge Muslim Politician எனும் தலைப்பில் இணையம் மூலமான கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தக் கோரிக்கையின் மூலம் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரப்படவுள்ளது.

அசாத் சாலி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இலங்கை அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதனையும் இன்னும் சுமத்தவில்லை என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த கையெழுத்து தளத்திற்கு இங்கே கிலிக் செய்யுங்கள்

No comments