Breaking News

பொதுபல சேனாவிற்கு எதிராக கருத்து வெளியிடவில்லை!- ஆயர் ரெய்மன்ட் கிங்ஸ்லி

Gnanasaraபொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தமது பெயரில் நேற்று வெளியாகி இருந்த செய்தியை காலி மாவட்ட கத்தோலிக்க ஆயர் ரெய்மெண்ட் கிங்ஸ்லி விக்ரமசிங்க மறுத்துள்ளார்.

இலங்கையில் பௌத்த தலிபான் இயக்கம் ஒன்று இயங்குவதாகவும், பொது பலசேனா போன்ற அமைப்புகளால் இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் முறுகல் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்ததாக நேற்றைய தினம் இணையத்தளங்கள் செய்தி வெளியாகி இருந்தது.

எனினும் இதனை மறுத்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தாம் இவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் இந்த செய்தி திரிபு படுத்தப்பட்டு பரப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

இலங்கையில் பௌத்த தலிபான் அமைப்பு இயங்கி வருகின்றது!- கத்தோலிக்க ஆயர் ரெய்மன்ட்

No comments