Breaking News

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலங்கையிலிருந்தும் நிதி - சுவிட்சர்லாந்து

swiss-flagபணச் சலவை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட விசாரணைகளில் இலங்கையில் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் சுவிட்சலாந்தின் விசேட புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்திருப்பதாக எசோசியேட்டட் பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பணச்சலவை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கல்கள் தொடர்பில் 15 முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில் அதிகமான சம்பவங்கள் சுவிட்சர்லாந்திலேயே இடம்பெற்றுள்ளது.

இலங்கை, சைப்பரஸ் போன்ற நாடுகளில் இருந்தும் இவ்வாறு பயங்காரவாத இயக்கங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிதிகள் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றம் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments