Breaking News

SLTJ யின் கூட்டத்திற்கு தடை…

PRINT_SLTJ இன்று கொம்பனித் தெரு ஹோலிரோஸரி மகா வித்தியாலயத்துக்கு முன்னால் ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் இனால் நடாத்தப்படவிருந்த பகிரங்க கூட்டம் இடம் மாற்றப்பட்டதாக நாம் எமது Twitter செய்தியில் சற்று முன் அறிவித்தோம். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்படி கூட்டம் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

சமகால முஸ்லிம்களின் சவால்கள் பற்றிய ஒரு கொள்கை விளக்க மாநாடாகவே இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கொம்பனித்தெரு பள்ளிவாசல்கள் சம்மேளம்பாதுகாப்பு தொடர்பாக கொம்பனித்தெரு பொலிசாரிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளது, அதன் பின்னரே கூட்டத்தை குறித்த இடத்தில் நடாத்த வேண்டாம் என பொலிஸ் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.

 

குறித்த கூட்டம் இன்று 6.45 மணிக்கு ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் (SLTJ) தலைமையகத்தில் நடாத்தப்படுமென்று SLTJ அறிவித்துள்ளது.

No comments