k.T ராஜசிங்கம் vs திலன்த விதானகே
பொது பலசேனா அமைப்பின் ஒருங்கினைப்பாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரான திலன்த விதானகே உடன் k.T ராஜசிங்கம் மேற்கொண்ட விறுவிறுப்பான நேர்காணல்
தமிழில்- றிஸ்மி ஆப்தீன்,கலகெதர
மதங்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளில் பொது பலசேனா அமைப்பு ஈடுபடாது என்றும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பு பொறுப்பில்லை என்றும் பகிரங்க அறிவிப்பு செய்ய இவ்வமைப்பு ஒத்துக்கொண்டுள்ளது.மேற்படி அறிவிப்பானது பொது பலசேனா அமைப்பினது ஒருங்கினைப்பாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரான திலந்த விதானகே அவர்களால் செய்யப்பட்டது.
பொதுபல சேனா அமைப்பினது தலைவராக கிரம விமலஜோதி தேரர் அவர்களும்,செயலாளராக கலகொடத்தே ஞானசார தேரர் அவர்களும், நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களாக ஹப்புதலே பங்ஞாசார தேரர்,விதாரந்தெனியே நந்த தேரர்,திரு.திலந்த விதானகே(இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரே உறுப்பினர்) ஆகியோர்கள் உள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பானது இனிமேல் சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு அதிலும் முக்கியமாக நாட்டின் மத ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருக்கமாட்டாது என அறிவித்துள்ளது.இவ்வமைப்பானது சிலகாலமாக ஹலால் உணவு வகை சம்பந்தமாக நாட்டினது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாரிய போராட்டமென்றை நடாத்தி வருவதோடு இதன்மூலம் நாட்டின் இன மத ஒருமைப்பாடானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதம் என்பது ஒரு தனிநபரது சொந்த நம்பிக்கை சார்ந்த ஒரு விடயமாகும்.துரதிஷ்டவசமாக இலங்கையில் மட்டுமள்ளாது உலக நாடுகளில் கூட மதங்கள் சூடான அரசியல் கருப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. இஸ்லாமும் கிறிஸ்தவ குரிசையும் அனேக நாடுகளின் தேசிய சின்னங்களாக காணப்படுகின்றன.
முன்னொரு காலத்தில் மகாவம்சமோ புத்தமதத்தினை பாதுகாக்கும் பொருட்டு தற்காப்பிற்காக கொலை செய்ய ஆதரிக்கும் அதே சமயம்,புத்தமதமோ மனித உயிரை புனிதமானதாக கருதுவதோடு'நிபான' எனும் பரிசுத்த நிலையினை அடையவும் இந்த சிறந்த பன்பானது முக்கியத்துவம் பெறுகின்றது.
எனினும் பின்வந்த புத்த மதத்தினை பின்பற்றக்கூடியவர்கள் இலங்கையில் புத்த மதத்தினை பரப்புவதற்காக சிறுபான்மை இனத்தவர்களது மத நம்பிக்கைகளை கிரயமாக்குவதாக பல குற்றச்சாட்டுகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (2009-05-19) பௌத்த மதத்தினர் எவரும் வசிக்காத வன்னி பிரதேசங்களில் அதிகமான புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளமைதெளிவான உண்மையாக காணப்படுகிறது.அதுமட்டுமன்றி கொழும்பு நகரில் கூட பௌத்தர்கள் மட்டுமன்றி ஏனைய அனைத்து மதத்தினரும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அதிகமான சாலைகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.பலர் இதனை பலவகையான இனக் குழுக்கள்வாழும் நாட்டில் மத ரீதியான பாகுபாட்டை நடைமுறைக்கு கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக கருதுகின்றனர்.
இதன் மிகக்கிட்டிய செயற்பாடாக முஸ்லிம்களது மத நம்பிக்கைகள் தாக்கப்படுகின்றன.தற்போது இஸ்லாமியர்களது உணவுப் பழக்கவழக்கங்களுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களது மத உணர்வுகளும் தேவையின்றி நோகடிக்கப்படுகின்றன.
இவ்வாறான தாக்குதல்கள் 50 உலகலாவிய இஸ்லாமிய நாடுகளது சினத்தை எமது நாட்டிற்கு சம்பாதித்துத்தந்துள்ளது.இங்கு கடந்த வருடம் ஜக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை முன்வைத்தபோது அனைத்து இஸ்லாமிய நாடுகளும் போலவே– சவுதி அரேபியா,குவைட்,கட்டார்,மொரிட்டானியா,மாலைத்தீவு,இந்தோனேஷியா,பங்களாதேஷ் என்பன இலங்கைக்கு சார்பாக தமது வாக்குகளை பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும். ஜக்கிய நாடுகளது 22 ஆவது மனித உரிமைகளுக்கான மாநாட்டில் 13 இஸ்லாமிய நாடுகள் பங்குபற்றுவதோடு அந்நாடுகளது ஆதரவானது இலங்கைக்கு மிக மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.பொது பலசேனாவானது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடருமாயின் மேற்படி நாடுகளது உதவியினை பெற்றுக்கொள்வது இலங்கை அரசுக்கு இயலாத காரியமாகிவிடும்.
ஏஷியன் ட்ரிபியுன் மேற்படி நிலையினை பொது பலசேனாவினது கவனத்திற்கு கொண்டுவந்ததோடு நாட்டில் மதப்பிரிவினை குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக அமைந்துவிட வேண்டாம் எனவும் அந்த அமைப்பிடம் கேட்டுக்கொண்டது.
ஏஷியன் ட்ரிபியுன் பொது பலசேனா அமைப்பினது ஒருங்கினைப்பாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரான திரு.திலந்த விதானகே அவர்களை தொடர்பு கொண்டு சிறுபான்மை இனங்களது மத நம்பிக்கைகளை தாக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டது.
ஏஷியன் ட்ரிபியுன் திலந்த விதானகே அவர்களுடன் செய்த கலந்துரையாடலின் மிக முக்கியமான மேற்கோள்களை கீழே தருகிறோம்.
ஏஷியன் ட்ரிபியுன்: இலங்கையில் தற்போது என்ன நடக்கின்றது?
திலந்த விதானகே : என்ன அர்த்தத்தில் கேட்கின்றீர்கள்?
ஏஷியன் ட்ரிபியுன் : பொது பலசேனா மற்றும் முஸ்லிம் சமூகம், ஹலால் பிரச்சினை போன்றன பற்றி கேட்கின்றேன்.இலங்கையில் அரங்கேற்றப்படும் நாடகங்களை சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
திலந்த விதானகே :இது ஒரு மிகச்சிக்கலான விடையம்அத்தோடு உமது கேள்விக்கு பதிலளிப்பதானதும் இங்கே இருக்கும் மிகச் சிக்கலான நிலமை பற்றிதான்.எது எவ்வாறாயினும், நான் இங்கு பொது பலசேனா சார்பாக மட்டுமே பேச முடியும்.
ஏஷியன் ட்ரிபியுன் : தயவுசெய்து தற்போதைய சிக்கலான பிரச்சினையில் பொது பலசேனாவினது நிலைப்பாடு மற்றும்ஈடுபாடு பற்றி எமக்கு கூறுங்கள்.
திலந்த விதானகே : நான் நாட்டின் நிலமை மற்றும் போக்கு பற்றி திருப்தியடையவில்லை.பொது பலவேனாவானது ஒரு அமைப்பு என்ற வகையில் ஒரு போதும் எவ்வித இனவாத தொந்தரவுகளையோ,இனரீதியான விரோதத்தினையோ அல்லது அதுபோன்ற விடயங்களை விரும்பவில்லை.ஆனால் சில காரணங்களுக்காக நாம் முன்வைத்த கோரிக்கைகளை வேறு சில குளுக்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.எனவே சிங்கள குழுக்களாகவோ முஸ்லிம் குழுக்களாகவோ அல்லது வேறு குழுக்களாகவோ இருக்கலாம்.
நாங்கள் எமது நாட்டு சிங்கள பௌத்தர்களது உரிமைகள் பற்றி பேசுகின்றோம்,சிங்கள பௌத்த கலாசாரத்தினை இந்த நாட்டில் பாதுகாக்க போராடுகிறோம்.நாம் ஏனைய மதத்தவர்களது உரிமைகளை சேதப்படுத்த நாடியதில்லை.
என்றாலும் சில அல்லது வேறுசில காரணங்களுக்காக சில தீவிரவாத அல்லது அடிப்படைவாத குழுகள் பிரச்சினைப்படுத்துகிறார்கள்,இவர்களில் சிங்கள குழுக்களும் இருக்கலாம் இஸ்லாமிய குழுக்களும் இருக்கலாம். நான் பிரதானமாக இஸ்லாமிய குழுக்களை குற்றம் சாட்டுகின்றேன். காரணம் அவர்களே நாட்டில் தேவையற்ற குழப்பத்தினை உருவாக்குகின்றனர்.
அத்தோடு நான் ஊடகங்களையும் சாடவேண்டும், அவர்கள் செய்திகளை பொறுப்பான முறையில் அறிவிப்பதில்லை.நாம் இங்கு போதிப்பதெல்லாம் நிச்சயம் நாட்டின் அபிவிருத்தியையும் இன மத நல்லிணக்கத்தினை வளர்கக்கூடியன.நிறைய விடயங்கள் இன்று நடக்கின்றன ஆனாலும் துரதிஷ்ட வசமாக அவையாவும் சரியான அமைப்பில் செல்வதாக இல்லை.
வெவ்வேறு குழுக்களால் ' FACEBOOK -முகப்புத்தகத்தில்'போடப்படும் பதிவுகளை பாருங்கள்.நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இவ்வாரான சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.உதாரணமாக எமது அமைப்பினது பெயர்,தெலைபேசி இலக்கம்,முகவரி தாங்கியதாக நாடு'ராகும் SMS செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 1915ம் ஆண்டு முஸ்லிம்கள் சிங்களவர்களை தாக்கியதன் நுற்றாண்டு மிக அருகில் சம்பூரணமாவதாகவும் அதன் ஞாபகர்த்தத்தினை முன்னிட்டு முஸ்லிம்களை தாக்க சிங்களவர்கள் ஆயத்தமகக வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இவை அனைத்தும் பொய்யான தகவல்கள்,நாம் ஒருபோதும் இவ்வாரான SMS செய்திகளை அனுப்பவில்லை.
என்றாலும் இவ்வகையான SMS செய்திகள் நாட்டில் சுழற்றப்படுகின்றன.நாம் இதுபற்றி குறித்த அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளோம. எமக்கு இப்படியான வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களின் இருப்பது யார் என்பதனை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அதேபோன்றுதான் மிகவும் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க வசனங்களை தாங்கிய பதிவுகள் ' FACEBOOK -முகப்புத்தகத்தில்' காணப்படுகின்றன. அரசாங்கமோ அவர்களுக்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.நான் பௌத்த பிக்குகளுடன் ஜனாதிபதி அவர்களை இறுதியாக சந்தித்தபோது இதுபற்றி அவரிடம் முறையிட்டேன்.
ஏஷியன் ட்ரிபியுன் : நீங்கள் இலங்கை ஜனாதிபதி அவர்களை இறுதியாக எப்போது சந்தித்தீர்கள்?
திலந்த விதானகே : நாம் ஜனாதிபதியுடன் செய்த களந்துரையாடல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்,எனக்கு குறித்த திகதி சரியாக நினைவில்லை.பொது பலசேனா அமைப்பினது அங்கத்தவர்கள் ஜனாதிபதியுடன் இரண்டு மணித்தியாள களந்துரையாடலொன்றினை செய்தது.அத்தோடு அங்கு சமுகமளித்திருந்த பொலிஸ் மா அதிபரிடம் மேற்படி சமூக விரோத செயல்களுக்கு எதிரகாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினோம், காரணம் அவை சீர்கேடான நடைமுறைகள்.
ஏஷியன் ட்ரிபியுன் : நான் உங்கள் கவனத்தை எமது நாடு எதிர்நோக்கவுள்ள பாரிய பிரச்சினையின்பால் தருப்ப விரும்புகின்றேன்.இதுபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
திலந்த விதானகே : அது ஜெனீவா பற்றிய விடயமா?
ஏஷியன் ட்ரிபியுன் : இலங்கையில் காணப்படும் இன மத பாகுபாடும் கூட,அது பற்றி? பொது பலசேனா இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இன அடக்குமுறையினை செய்ததன் காரனமாகவே மேற்படி நிலை ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிந்துகொண்டோம்.
திலந்த விதானகே : இல்லை. இது அப்பட்டமான பொய்
ஏஷியன் ட்ரிபியுன் : நீங்கள் இதனை அபாண்டமெனக் கூறுகின்றீர்கள், ஆனால் சர்வதேச சமூகமோ அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.
திலந்த விதானகே : முஸ்லிம்களது இடங்களுக்கோ, வழிபாட்டுத்தளங்களுக்கோ அல்லது முஸ்லிம் நபர்களையோ தாக்கிய சம்பவங்களில் பொதுபல சேனா அமைப்புக்கு தொடர்பு உண்டு என்பதனை ஆதாரர்வபூர்வமாக நீரூபிக்குமாறு நாம் சர்வதேச சமூகத்திற்கு சவால் விடுகின்றோம்.
ஏஷியன் ட்ரிபியுன் : ஆனால் நீங்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்களையும் முஸ்லிம்களையும் தாக்கியதற்கான அறிக்கைகள் ஏற்கனவே காணப்படுகின்றன.
திலந்த விதானகே : இல்லை. இதனை நான் கடுமையாக மறுக்கின்றேன்.
ஏஷியன் ட்ரிபியுன் : நான் கூட மேற்படி செய்தித் தகவல்களை இங்கே கொண்டுவந்துள்ளேன்.
திலந்த விதானகே : பொதுபல சேனா தாக்குதல் மேற்கொண்டதென்றா கூறுகிறீர்கள்?
ஏஷியன் ட்ரிபியுன்: ஆம். பொதுபல சேனா
திலந்த விதானகே : இல்லை அவை முற்றும் பிழையான தகவல்கள்.நான் அவற்றை வன்மையாக கண்டிக்கின்றேன்.இவை பொய்யான தகவல்கள். இந்த விடயத்தில் உங்களிற்கோ அல்லது எவருக்கும் சவால்விடுக்க நான் தயார்
ஏஷியன் ட்ரிபியுன்: நீங்கள் எனக்கு சவால் விடுக்க தேவையில்லை,நான் ஒரு பத்திரிகையாளன் உருவாகும் உண்மைகளை அறிவிப்பது மட்டுமே எனது தொழில்.ஆனால் நான் பொதுபல சேனா அத்தகைய சம்பவங்களில் சம்பந்தப்படவில்லை என்பதனை யாராவது முன்வந்து பகிரங்கமாக அறிவிப்பு செய்யுமாறு கேட்பேன்.பொதுபல சேனா நாட்டை ஒரு இக்கட்டான நிலமைக்கு தள்ளியதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.சர்வதேச சமூகமோ என்னையோ அல்லது உங்களையோ நம்பப்போவதில்லை,மாறாக நாட்டில் இன மத ரீதியான பாகுபாட்டை பொதுபல சேனா உருவாக்கிவருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.அதுமட்டுமன்றி நீங்கள் முஸ்லிம்களை ஓரம் கட்டி அவர்களை நாட்டைவிட்டும் துரத்த முயல்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திலந்த விதானகே : இல்லை.... ஒருபோதும் இல்லை
ஏஷியன் ட்ரிபியுன்:உலகில் கிட்டத்தட்ட 50 இஸ்லாமிய நாடுகள் இருப்பதனை நீங்கள் அறிவீர்களா? அவற்றில் 13 நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றன.அவை உட்பட 47 நாடுகள் இதில் காணப்படுகின்றன.
திலந்த விதானகே : எப்போது அவர்கள் எமது நாட்டிற்கு எதிரான அந்த தீர்மானத்தை கொண்டுவருகிறார்கள்?
ஏஷியன் ட்ரிபியுன்:ஏஷியன் ட்ரிபியுன் இணையமோ இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்த அந்த தீர்மானத்தினது மூன்றாவது வரைபினை ஏற்கனவே பிரசுரித்துள்ளது.
திலந்த விதானகே : அந்த தீர்மானத்தில் அவரகள் பொதுபல சேனாவினது பெயரை குறிப்பிட்டுள்ளார்களா?
ஏஷியன் ட்ரிபியுன்:இல்லை. அவர்கள் பொதுபல சேனாவினதோ வேறு எவரது பெயரையோ குறிப்பிடவில்லை.அது முழுமையாக இன மத பாகுபாட்டை அல்லது அடக்குமுறை பற்றி பேசுகிறது.அவர்கள் எவரது பெயரையும் குறிப்பிடவில்லை ஆனாலும் அதனது மூன்றாவது வரைபினை வாசித்தால் உங்களுக்கு விடையம் தெளிவாகும்.
திலந்த விதானகே: அப்படியென்றால் எனக்கு அதற்கு பதிலளிக்க முடியாது.நான் சொல்வதென்னவென்றால் பொதுபல சேனா சார்பில் மட்டுமே எனக்கு பதிலளிக்க முடியும்.நீங்கள் தற்போது அதில் எமது அமைப்பினது பெயர் இடம்பெறவில்லை என கூறினீர்கள்.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய அறிக்கைகள் வெளிவருகின்றன.இதில் பலவந்தமான ஆற்கடத்தல்,காணாமல் போதல்,அதிகமான கொலை நடவடிக்கைகள்,சித்திரவதை,சங்கங்கள் மற்றும் அமைதிகாக்கும் நிருவனங்களது கருத்துச் சுதந்திரம் மீறப்படல்,அதேபோல்;சிவில் சமூக உறுப்பினர்களை மற்றும் பத்திரிகையாளர்களை,மனித உரிமை பாதுகவளர்களைஅச்சுறுத்துதல் மற்றும் தாக்குதல், நீதித்துறை சுதந்திரத்திற்கும்சட்டத்திற்கும் அச்சுறுத்துதல்,மதம் அல்லது நம்பிக்கைகள் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தல்.
ஏஷியன் ட்ரிபியுன் : சர்வதேச சமூகமோ நாட்டினுள் காணப்படபடும் அமைப்பினது பெயரை குறிப்பிடவில்லை.மாறாக அது நாட்டில் இன மதரீதியான அடக்குமுறைகள் வன்முறைகள் என்பவற்றுக்குக் காரணமான அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கமோ உதவுவதாகவும் உடந்தையாக இறுப்பதாகவும் கடுமையாக குற்றஞ்சாட்டுகின்றது.அதில் உங்களுக்கு ஆயுதமேந்திய இளைஞர் அமைப்பொன்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளீர்கள்.ஐக்கிய நாடுகளது இலங்கைக்கு எதிரான முன்மொழிவின் மூன்றாவது வரைபில் இலங்கையில் காணப்படும் இன மதரீதியான அடக்குமுறைகள்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய அறிக்கைகள் வெளிவருகின்றன.இதில் பலவந்தமான ஆற்கடத்தல்,காணாமல் போதல்,அதிகமான கொலை நடவடிக்கைகள்,சித்திரவதை,சங்கங்கள் மற்றும் அமைதிகாக்கும் நிருவனங்களது கருத்துச் சுதந்திரம் மீறப்படல்,அதேபோல்;சிவில் சமூக உறுப்பினர்களை மற்றும் பத்திரிகையாளர்களை,மனித உரிமை பாதுகவளர்களைஅச்சுறுத்துதல் மற்றும் தாக்குதல், நீதித்துறை சுதந்திரத்திற்கும்சட்டத்திற்கும் அச்சுறுத்துதல்,மதம் அல்லது நம்பிக்கைகள் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தல்.
திலந்த விதானகே:மேற்படி குற்றச்சாட்டின் பின் எவ்வித உண்மையும் கிடையாது.எம்மிடம் ஆயுதம் தாங்கிய குழுகள் கிடையாது
ஏஷியன் ட்ரிபியுன் : நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களிடம் ஓரளவு-இராணுவ ரீதியான இளைஞர் குழுக்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.உங்களிடம் அவ்வாறானதொரு குழு உண்டல்லவா?
திலந்த விதானகே: இல்லை எம்மிடம் இல்லை.
ஏஷியன் ட்ரிபியுன் : அவர்கள் சொல்கிறார்களே!
திலந்த விதானகே: அதுபற்றி எனக்கு கருத்து சொல்ல முடியாது. எம்மிடம் இராணுவரீதியான படைகள் இல்லை.
ஏஷியன் ட்ரிபியுன் : அப்படியானால் உங்களிடம் எவ்வித இளைஞர் அமைப்புகளோ குழுக்களோ கிடையாதா?
திலந்த விதானகே: எம்மோடு இணைந்து செயற்படக்கூடிய இளைஞர் குழுக்கள் இருக்கின்றன.அவர்கள் ஆயுதமேந்தும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
ஏஷியன் ட்ரிபியுன் : 'பாரதீய ஜனதா கட்சியினது' (BJP) தாய் அமைப்பான ' ராஷ்திரியசுயம்சேவக் சாங்' (RSS)இவர்களுக்கு இராணுவரீதியான இளைஞர் குழுக்கள் இருந்தன.அவர்களிடம் வெருமனே இரு தடி மட்டுமே இருந்தது.நீங்கள் (RSS)பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
திலந்த விதானகே: சற்று கேளுங்கள், நாங்கள் அண்மையில் மகரகம மற்றும் மாலம்பே நபரில் ஏற்பாடு செய்யப்பட்ட எமது கூட்டங்களில் நாம் இது பற்றி பேசினோம்.மேலும் நாட்டில் எவ்வித சமூகப்பிச்சினைகளையும் தோற்றுவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டோம்.
ஏஷியன் ட்ரிபியுன் : அன்மையில் உமது அமைப்பினது காரியாலயமொன்று பாதுகாப்புச் செயலாளரால் திறந்து வைக்கப்பட்டதல்லவா!
திலந்த விதானகே: உண்மையிலே இலங்கையில் வசிக்கும் ஓர் ஜேர்மன் நாட்டு நபர் இலங்கை பௌத்த கலாச்சார மையத்துடன் சேர்ந்து ஓர் அறக்கட்டளை நிருவனமொன்றை அமைத்தார்.இந்த மையத்தினது தலைவராக 'கிரம விலஜோதி தேரர்' அர்கள் காணப்படுகின்றார்.அவரே இலங்கை பௌத்த கலாச்சார மையத்தினது தலைவரும் ஆவார்கள்.இவரே மேற்படி நிகழ்ச்சிக்கு பாதுகாப்புச் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை அழைத்தார்கள்.
ஏஷியன் ட்ரிபியுன் : இந்த'கிரம விலஜோதி தேரர்'என்பவர் யார்?
திலந்த விதானகே: 'கிரம விலஜோதி தேரர்'இவரே 'பொதுபல சேனா'மற்றும் இலங்கை பௌத்த கலாச்சார மையம் என்பவற்றின் தலைவர் ஆவார்கள்.அவர்தான் மேற்படி நிகழ்வுக்கு திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை அழைத்தார்கள்.இந்த ஜேர்மன் நாட்டு நபரானவர் தனது காணியை கொடையாக வழங்க முற்பட்டு 'பொதுபல சேனா'அமைப்பை நாடி வந்து எம்மை சந்தித்தார்.
எமக்கு கட்டிடங்களோ பௌத்த வழிபாட்டுத்தளங்களினதோ தேவை இன்மையால் எமது தலைமை பிக்குவை சந்தித்து பேசுமாரு கூறினோம், ஏனென்றால் அவர் ஒரு சில பௌத்த களாச்சார நிலையங்களை நடாத்திவருகிறார்.நிச்சயமாக அவர் மேற்படி கட்டிடவிடயத்திலும் வேறு நிகழ்ச்சிகளிற்கும உதவி செய்துள்ளார்கள்.எனவே பாதுகாப்புச் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை எந்தவொரு அமைப்பும் அவர்களது நிகழ்ச்சிகளுக்கு அழைக்கலாம்.அதில் எந்த சிக்கலும் இல்லை.
ஏஷியன் ட்ரிபியுன் : நீங்கள் பொதுபல சேனா அமைப்பிற்கு எவ்வித சொத்தும் இல்லையென்று கூறினீர்கள்,அப்படியாயின் எப்படி 12 மாடிக்கட்டிடம் சொந்தமானது?
திலந்த விதானகே: என்ன? ....... பொதுபல சேனாவிற்கா?
ஏஷியன் ட்ரிபியுன் : ஆம்
திலந்த விதானகே: அது ஒரு தவறான தகவல்.இதுவும் கூட கிரம விமலஜோதி தேரரது நிறுவனமான பௌத்த கலாச்சார மையத்திற்கு உரித்தானது,இது அவரகளால் 2600 ஆம் புத்த ஜயந்தி நிமித்தம் கட்டப்பட்டது,அதில் இரண்டு அறைகளில் பொதுபல சேனாவினது காரியாலயம் செயற்படுகின்றது.
ஏஷியன் ட்ரிபியுன் : அந்த 12 மாடிக்கட்டடம் எங்கு அமைந்துள்ளது?
திலந்த விதானகே: தும்முல்ல சந்தியில்
ஏஷியன் ட்ரிபியுன் : இக்கட்டிடம் கிரம விமலஜோதி தேரரிற்கு சொந்தமானாலும் பொதுபல சேனாவிற்கு சொந்தமானலும் இரண்டும் ஒன்றுதானே? எனக்கு இதில் வித்தியாசமில்லை என்று தோன்றுகிறது.
திலந்த விதானகே: இல்லை அது முற்றுpலும் வித்தியாசமானது,எங்களுக்கு ஒரு காரியாலயம் தேவைப்பட்டபோது அவர் எமக்கு இரண்டு அறைகளை ஏற்பாடு செய்து தந்தார்கள். இந்த கட்டடத்தினை கட்ட அவர்கள் கிட்டத்தட்ட 240 மிலியன் ரூபாக்களை கடனாக பெற்றுள்ளார்கள்.
ஏஷியன் ட்ரிபியுன் : அனைத்துவிமான உலகலாவிய சடத்துவ விடயங்களையும் துறந்த கிரம விமலஜோதி தேரர் எவ்வாறு பாரியதொகை பணத்தினை ஒரு வங்கியிடமிருந்து கடனாக பெற்றிருக்க முடியும்?
திலந்த விதானகே: அதுபற்றி எனக்கு யாதும் தெரியாது.இதை நீங்கள் அவரிடமதான் வினவ வேண்டும்.நான் இந்த விடயங்களில் சம்பந்தப்படவில்லை.அவரகள் நம்பிக்கையான மக்கள்.அந்த கட்டடத்தில் இலங்கை வங்கிக் கிளையொன்றும் உள்ளது.அங்கு இன்னும் பல காரியாலயங்கள் காணப்படுகின்றன.
ஏஷியன் ட்ரிபியுன் : எனினும் இக்கட்டிடமானது பொதுபல சேனாவிற்கு சொந்தம் என்பதே பொதுவான கருத்தாகவுள்ளது.அந்த 12 மாடிக் கட்டிடத்தினது பெயர் என்ன?
திலந்த விதானகே: ஸ்ரீ சம்புத்தத்வ ஜயன்தி மந்திரய என்பதே இதன் பெயர்.அந்த இடம் சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு www.buddehistcc.net என்ற தளத்திற்கு செல்லவும்.
ஏஷியன் ட்ரிபியுன் : ஆங்கில மொழியில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளனவா?
திலந்த விதானகே: ஆம் யாவும் ஆங்கில மொழியிலேயே உள்ளது
ஏஷியன் ட்ரிபியுன் : ஏன் அப்படியானால் பொதுபல www.bodupalasena.org என்ற தளம் சிங்கள மொழியில் மட்டுமுள்ளது?
திலந்த விதானகே: ஆம் நாம் அதனை ஆங்கில மொழியில் செய்யவுள்ளோம்.ஆனாலும் எங்களிடம் அதற்கேற்ற வளம் இல்லை.நாம் அதனை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் செய்யவிருந்தோம் ஆனாலும் எமக்கு இருக்கும் வளப்பற்றாக்குறை மற்றும் பணவசதியின்மை காரணமாக அதனை இற்றைப்படுத்த முடியவில்லை.
ஏஷியன் ட்ரிபியுன் : நான் அதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை.பொதுபல சேனாவிடம் பணவசதி இல்லையென்றால் உலகில் வேறுயாரிடம் இருக்கும்?
திலந்த விதானகே: உண்மையாக எம்மிடமில்லை,நான் பகுடி செய்யவில்லை.
ஏஷியன் ட்ரிபியுன் : உங்களது கவனத்திற்கு கொண்டுவரவேண்டிய மிக முக்கியமான காரணி என்னவென்றால் நாட்டினது சட்ட யாப்பிற்கு ஏற்ப இலங்கை ஒரு பௌத்த நாடு,விடயம் இவ்வாறிறுக்க ஏன் பௌத்த மக்கள் நாட்டில் அதிகமதிகான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
நீங்கள் சண்டை பிடிக்கலாம்.அதுபற்றி எனக்குக் கவளையில்லை. ஆனால் சர்வதேச ரீதியில் எனது நாட்டிற்கு பிரச்சினையினை உருவாக்குகின்றீர்கள்.இலங்கைவாழ் முஸ்லிம்களது சுதந்திரத்தினை, உரிமைகளை நீங்கள் இல்லாமல் செய்தால் சர்வதேச இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு உதவும் என்று நினைக்கின்றீர்களா?
திலந்த விதானகே: நாம் பிரச்சினைகளை உருவாக்கவில்லை...நிச்சயமாக முஸ்லிம்கள்தான் இந்த பிரச்சினையினை உருவாக்கினார்கள்.
ஏஷியன் ட்ரிபியுன் : உங்களுக்கு அப்படி சுலபமாக குற்றச்சாட்டை வேறொருவர் தலையில் போடமுடியாது.நான் சொல்வதனை கேளுங்கள்.நான் ஒரு முஸ்லிம் அல்ல, நான் ஒரு கிறீஸ்தவன் அல்ல,நான் ஒரு இந்துவும் அல்ல.நான் ஒரு இலங்கையன்,அதுதான் எனது மதம்,அதுதான் எனது தேசியம் மற்றும் எல்லாம்.இதையும் புரிந்துகொள்ளுங்கள் நான் ஒரு சிங்களவனல்ல,நான் ஒரு தமிழனுமல்ல,ஆனால் நான் ஒரு இலங்கையன்.நான் எனது நாட்டினது நலனில் மட்டுமே அக்கரை காட்டுகின்றேன்.
இலங்கைக்கு எதிரான அந்த மூன்றாவது முன்மொழிவிலே அவர்கள் தமது கோரைப் பற்களை இன்னும் கூர்மை செய்து எனது நாட்டை தாக்குகின்றார்கள்.அவர்களது இறுதிப்பதிப்பிலே மேலும் ஒரு விடயத்தினை சேர்த்துள்ளார்கள் அதுதான் - மதங்கள்,இனங்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள்.பொதுபல சேனா மற்றும் முஸ்லிம்கள் இருதியில் ஆயுதம் ஏந்துமளவுக்கு ஓருவரையொருவர் எதிர்த்தமையே இவ்வாறான ஒரு விடயம் உள்ளடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
திலந்த விதானகே: பொதுபல சேனா மதங்கள்,இனங்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கவில்லை என நான் நினைக்கின்றேன்.
ஏஷியன் ட்ரிபியுன் : நீங்களோ நானோ நினைப்பது போல் அல்ல,எம்மைப்பற்றி சர்வதேசம் எவ்வாறு நினைக்கின்றது என்பதுதான் விடயம்.எனவே விவேகமாக நடந்துகொள்ளுங்கள் உங்களது நடவடிக்கைகளை கைவிட்டுவிடுங்கள்.
உங்களுக்குத் தேவையானால் நீங்கள் பௌத்த மதத்தினை பரப்புங்கள்,யாரும் அதற்கு தடை விதிக்கமாட்டார்கள். ஆனால் அதற்கு முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பலியாக்கிவிடாதீர்கள்.
ஏன்? புத்த பெருமானோ மிகப்பெரியதோர் பிரச்சாரகர்,அவரது போதனைகளோ புத்த மதத்தனை இலங்கையில் மட்டுமல்லாது உலகம் பூராகவும் பரப்புவதற்கு போதுமானது.'தின்னன்க'போன்ற தமிழக புத்த துறவிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்,நாலந்தாவினது மாணவராக இருந்த அவர் ஓர் சிறந்த பௌத்த தர்க்கவியலாளராவார் பின்னர் கான்ஞியில் வசித்துவந்தார்.அதேபோன்று புத்தருடைய போதனைகளை பரப்ப சீனா சென்ற போதி தர்மர் தென்னிந்தியாவின் கான்ஞியிலிருந்து சென்றவர்.இவர்கள்தான் தாய்லாந்து,சீனா மற்றும் பல தென்கிழக்கு நாடுகளில் புத்த மதத்தினை பரப்பினார்கள்.
புத்த பெருமானோ மிகப்பெரியதோர் போதனையாளர்.அவருடைய போதனைகளை அடிப்படையாகக்கொண்டு புத்த மதத்தினை உங்களுக்கு பரப்ப முடியும்.உங்களுடைய மதத்தினை பரப்ப ஏன் முஸ்லிம்களை பயன்படுத்துகின்றீர்கள்? அதற்கு அவசியமே இல்லை.
திலந்த விதானகே: ஆம் எமக்கு அவர்கள் தேவையில்லை.நீங்கள் கொழும்பிற்கு வந்தால் நான் எமது நிலைப்பாட்டினை உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துவேன்.சிங்கள மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை விளங்கப்படத்தக்கூடிய பல விடயங்களை உங்களுக்கு என்னால் காட்ட முடியும்.
ஏஷியன் ட்ரிபியுன் :அது எப்படி சாத்தியமாகும்? நாட்டின் சட்டயாப்பின் மூலம் புத்த மதத்திற்கு முக்கியத்துவமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.எனவே புத்த மதத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்க முடியாது.புத்தமதம் இந்த வரப்பிரசாதத்தினை 1972ம் ஆண்டு முதல் அனுபவிக்கின்றது.இது முதன்முறையாக திருமதி பண்டாரநாயக்கவினது குடியரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டது. பின்னர் ஜே.ஆர்.ஜயவர்தனவுடைய 1978ம் ஆண்டு யாப்பிலும் இது பின்தொடரப்பட்டது.
திலந்த விதானகே: நான் ஒரு விடயத்தினை உங்களது கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்,அதாவது இலங்கையினது பிரதான வனங்களில் ஒன்றான வில்பத்துவின் 3000 ஏக்கர் நிலமானது உள்நாட்டில் இடம்பெயர்ந்த (IDPs) முஸ்லிம்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஏஷியன் ட்ரிபியுன் :அன்பரே உங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் குளறுபடியானதாகவும் பிழையானதாகவும் காணப்படுகின்றன.அது வில்பத்துவில் அல்ல.அது மன்னாரில்,1990ம் ஆண்டில் புலிகளால் விரட்டியடிக்கப்பட முன்னர் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முஸ்லிம்கள் வசித்துவந்தனர்.
திலந்த விதானகே:பிறகு ஏன் அவர்கள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்?
ஏஷியன் ட்ரிபியுன் :நான் அறிந்தமட்டில்,அந்த நிலமானது பின்னர் திடீரென வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனால்தான் அவர்கள் தமது நிலத்தினை மீளப்பெறுவதற்கு வனப்பாதுகாப்புத் தினைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியுள்ளது.
'கோளவியல் இருப்பிற்கு அமைவாக மன்னார் வட மாகாணத்திலும் வில்பத்து வட மத்திய மாகாணத்திலும் காணப்படுகின்றது.
திலந்த விதானகே: அப்படியாயின் இதுபற்றி சூழலியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஏஷியன் ட்ரிபியுன் :நீங்கள் கூறும் அந்த சூழலியலாளர்கள் யார் என்று எனக்குத் தெரியாது.
திலந்த விதானகே:அவ்வாறாயின் நிபுணத்துவமிக்க அந்தசூழலியலாளர்களலிடமிருந்து பெற்ற அந்த தொலை நகல் ஆவணங்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.
ஏஷியன் ட்ரிபியுன் :தயவு செய்து அவர்களை'நிபுணத்துவமிக்கவர்கள்'என்று கூறவேண்டாம்.தயவு செய்து இலங்கை வரைபடத்தில் மன்னார் எங்குள்ளது வில்பத்து எங்குள்ளதென்று நன்றாக பாருங்கள்.அதுமட்டுமன்றி வில்பத்து பற்றி கவலைப்பட பொதுபல வேனா ஒன்றும் சூழல் பாதுகாப்பிற்கான அமைப்பல்லவே.
1990ல் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர்.அவர்கள் கடந்த 23 வருடங்களாக புத்தளம் பகுதியில் வசித்து வருகின்றனர்.துரதிஷ்டவசமாக அரசாங்கமோ ஏனைய 300,000 இடம் பெயர்ந்தோரோடு இவர்களையும் மீள' குடியமர்த்த கரிசனை காட்டவில்லை.அரசாங்கம் அவர்களை பழைய (IDPs )என்று கூப்பிட்டதே தவிர ஏனைய அகதிகளுடன் சேர்த்து இவர்களை தமது சொந்த பூர்வீக இடங்களில் மீள குடியமர்த்த தவறிவிட்டது.
திலந்த விதானகே: ஆனாலும்,வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பரதேசமானது முஸ்லிம்களது பூர்வீக இடமல்ல.
ஏஷியன் ட்ரிபியுன் :அந்த முஸ்லிம் அகதிகள் வில்பத்துவிற்கு வரப்போவதில்லை,மாறாக அவர்கள் 1990 ற்கு முன்னர் தாம் வாழ்ந்த மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு வருவார்கள்.
திலந்த விதானகே: அவர்கள் அவர்களது பூர்வீக இடங்களுக்கு செல்வதாயின் இங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. ஆனாலும்,வில்பத்துமுஸ்லிம்களது பூர்வீக இடமல்ல.
ஏஷியன் ட்ரிபியுன் :நான் இதனை சொல்ல வேண்டியதனையிட்டு மனம்வருந்துகிறேன்..யாரோ ஒருவர் பொதுபல சேனாவை தவறாக வழிநடாத்துகிறார்கள்.
திலந்த விதானகே:எனக்கு சரியாக தெரியவில்லை மேலும் நான் உங்களுடன் விவாதிக்கவும் தயாரில்லை.எனக்குக் கிடைந்த அந்த தகவல்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கின்றேன்,நீங்கள் அதை பாத்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.
ஏஷியன் ட்ரிபியுன் : நான் நினைப்பதென்னவென்றால் இவ்விடயம் சம்பந்தமாக நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களை தொடர்பு கொள்வது நன்று.அவர் உங்களுக்குத் தேவையான சரியான துள்ளியமான தகவல்களை வழங்கலாம்.அவரிடம் இந்த முஸ்லிம்கள் எங்கு செல்லவுள்ளனர் என்று வினவுங்கள்.அவரை தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது கடிதமொன்றை அனுப்பலாம்.
நான் ஏப்ரில் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வரளாம்,ஆனால் தற்போது நான் வருந்துவதெல்லாம் மார்ச் 22ம் திகதி என்ன நடக்கும் என்பதனை பற்றியே,அமெரிக்கா 22 ஆவது ஜக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான அமர்வில் இலங்கைக்கு எதிராக வாக்குகளை சம்பாதிக்கப்போகின்றது.நானும் அதிகமான இலங்கையர்கள் போன்று நிலமை சீராக வேண்டும் என்ற ஆர்வத்தில்,ஆதங்கத்தில் இருக்கின்றேன்.
திலந்த விதானகே:கடந்த வருடமும் இதைத்தானே அவர்கள் செய்தார்கள்?
ஏஷியன் ட்ரிபியுன் : இல்லை அது வித்தியாசமானது,இம்முறை எனது நாட்டின் விடயத்தில் அவர்கள் மிக ஆவேசமாகவும் கடுமையாகவும் உள்ளார்கள்.
நான் அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கு நாடுகள் சேர்ந்து இலங்கையில் 'கொசோசோ'போன்ற ஒரு நிலையினை உருவாக்கிவருகின்றதா என சந்தேகப்படுகின்றேன்.சர்வதேச சமூகம் திட்டமிடுவதெல்லாம் இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து பிரித்து இலங்கையில் 'கொசோசோ'தேசமொன்றை உருவாக்குவதற்கே.இலங்கையில் இவ்வாறானதோர் நிலை ஏற்படின் அதற்கு காரணமான மிக முக்கியமானதொரு அமைப்பாக பொதுபல சேனா அமைப்பானது இருக்கவேண்டுமென விரும்புகிறதா?
திலந்த விதானகே:தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், யாராவது ஜெனீவாவில் நடக்கும் அனைத்து விடயங்களுக்கும் எம்மை குற்றம் சுமத்தினால் அது தவறாகும்.அடுத்ததாக பொதுபல சேனா இந்த விடயத்திற்கு எவ்விதத்தலும் பங்களிப்பும் செய்யவில்லை.இங்கு கவனிக்கப்படவேண்டிய பலர் இருக்கின்றனர்.நாங்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியே.
ஏஷியன் ட்ரிபியுன் : நான் ஒரு ஆலோசனையினை முன்வைக்கலாமென நினைக்கின்றேன்.நீங்கள் நாட்டிற்காக நலவை நாடுவதாயின் அவசரமாக நீங்கள் ஆங்கில மொழியில் ஓர் அறிக்கையினை செய்ய வேண்டும்,அதில் நாட்டில் ஏற்பட்டுள் இன மத பதற்ற நிலைக்கு பொதுபல சேனா எந்தவகையிலும் பொறுப்பல்ல என தெளிவாக கூற வேண்டும்.மிக அவசரமாக இந்த அறிக்கையினை செய்யுங்கள் நாளை முடியுமாயின் சிறப்பாகவிருக்கும்.
திலந்த விதானகே:நிச்சயமாக நாம் அறிக்கையொன்றினை விடுப்போம் அதன் பிரதியினை உங்களுக்கு அனுப்பியும் வைப்போம்.
நன்றி- மார்ச் 18,( www.asiantribune.com)
கடந்த மார்ச் 18 அன்று asiantribune.com தளத்தில் வெளியான பேட்டியின் தமிழாக்கம். (மீள்பார்வை இணையப்பக்கத்திலிருந்து…)
No comments