Breaking News

இனவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் களமிரங்கியமை நாட்டுக்கு கிடைத்த வெற்றி - சமித்த தேரர்

இனவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இளைஞர்கள் களமிரங்கியிருப்பது இலங்கைக்கு கிடைத்த பெரு வெற்றியாகும் என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.

இலங்கையில் பகைமைக்கு இடமில்லை எனும் தொனிப்பொருளுடனான  பேஸ் புக் நண்பர்களின் பேரணியொன்று இன்று கொழும்பு தாமரை தடாகம் முன்பாக இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே சமித்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இளைஞராக இருக்கும் போது இனவாதத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கவில்லை. அதன் விளைவாக 30 வருட கால யுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால் தற்போது இனவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் களமிரங்கியிருப்தை நினைத்து நாம் பெருமையடைகிறோம்.

30 வட காலமாக இடம்பெற்ற யுத்தத்தில் எத்தனையோ இலட்சக்கணக்கான உயிர்களை நாம் பறிகொடுத்துள்ளோம். மறுபடியும் யுத்த சூல்நிலையை ஏற்படுத்த நாம் விரும்ப மாட்டோம். என்றாலும் சில இனவாத விஷமிகள் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பது கவலைக்குறியதாகும். இதற்கெதிராக அனைத்து இலங்கையர்களும் ஒன்று பட வேண்டும் என தெரிவித்தார்.

 

(VD)

No comments